மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரும் கணங்களுக்கெல்லாம் அதிபதியும் விநாயகரை நாள்தோறும் வணங்கி வருவதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை காண முடியும்.
சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை. கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம்.
துன்பங்கள் விலகி இன்பம் பெற வினை தீர்க்கும் விநாயகரை விரதமிருந்து வழிபடுங்கள்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறும் விலகும்.