உமையம்மை கம்பையாற்றில் வெள்ளநீர் வரும்போது சிவலிங்கத்தை தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாத்துனாங்களோ அதைப்போல திருமணமான புதுப்பெண், தன் கணவனையும் குடும்பத்தையும் எவ்வித இன்னல்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதை விளக்கவே திருமணத்தில தாலிகட்டி முடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு பனைஓலை கூடையிலே நெல்லும் அதன்மேல காமாட்சியம்மன் விளக்கும் வைத்து ஏற்றி மணவறையை வலம் வரச் சொல்லுகிறார்கள்.
உமையம்மைக்கு எப்படி சிவபெருமான் நெல்லைக் கொடுத்து உழவைப்பெருக்கி அறச்செயல்களைச் செய்யச் சொன்னாரோ அதைப்போலவே, மணப்பெண்ணும் தன்னுடைய புகுந்த வீட்டில் முறையாக செல்வத்தைப் பெருக்கி, இருளும் விலகி நம் வாழ்க்கை பிரகாசமாக ஒளிரும்.