Sunday, January 26, 2025

ஆடி மாதத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு சிறப்பு?

- Advertisement -

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக இருக்கின்றன. ஆடி மாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபட வேண்டிய முறைகளையும் காணலாம்.

- Advertisement -

ஆடி மாதத்தில் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குவதால் மேன்மை உண்டாகும்.

அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

- Advertisement -

ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!