Advertisement
ஆன்மீகம்ஜோதிடம்

மகாலட்சுமியின் அருள் கிட்டும் வலம்புரிச் சங்கு வழிபாடு!!

வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிட்டும் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடும்.

வீட்டில் வாஸ்து குறை காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்கும்.

வழிபாட்டு முறைகள் தெரியாதவர்கள் எப்படி வலம்புரி சங்கினை வைத்து பூஜித்து மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறுவது என பார்ப்போம். முதலில் 7 அங்குல நீளத்திற்கு குறையாத மாசு மருவற்ற ஒரு வலம்புரிச் சங்கினை வாங்கிக் கொள்ளுங்கள். நன்னீரினாலும், பின்னர் மஞ்சள் கலந்த நீரினாலும் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

வலம்புரிச் சங்கிற்கு அளவான ஒரு வெள்ளி தட்டில் பச்சரிசி பரப்பிக் கொள்ளுங்கள். (வெள்ளித் தட்டில் வைக்க வசதியில்லாதவர்கள் பித்தளை தட்டினை உபயோகிக்கலாம்.) அதன் மேல் வெண் பட்டு விரித்துக் கொள்ளுங்கள். இந்த தட்டினை மகாலட்சுமி தேவியின் படத்தின் முன்னால் வைக்கவும். அதன் மேல் வலம்புரிச் சங்கினை பிளந்த பக்கம் மேற்புறமாக இருக்குமாறு வையுங்கள். இதற்கு முதல் சங்கிற்கு வட்டமான முன் பகுதியில் நடுவில் ஒன்றும் சுற்றி ஆறுமாக ஏழு பொட்டுக்கள் அதாவது முதலில் சந்தனம் அதன் மேல் குங்குமம் வைக்கவும். பின் பிளந்த பக்கத்தின் ஓரமாக இதே போல் ஏழு பொட்டுக்கள் வைக்கவும். சங்கினுள் சிறிது மஞ்சள் கலந்த நீர் விட்டு நிரப்பவும். இதனுள் இரண்டு கிராம்பு சேர்க்கவும். வசதியுள்ளவர்கள் இரண்டு குங்குமப் பூவும் சேர்க்கலாம். இப்படி தயார் செய்யப்பட்ட சங்கினை தட்டில் வைக்கவும். சங்கு கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். வால் பகுதி மேற்கு நோக்கியிருக்க வேண்டும்.

நெய் தீபம் ஏற்றவும். சங்கு உள்ள தட்டினைச் சுற்றி மல்லிகை, சிகப்பு ரோசா, சிகப்பு அரலி பூக்களை தூவி பூக்களின் மேல் தூய பன்னீர் தெளிக்கவும்.

பின்னர்,

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பாவ மானாய தீமஹி

தந்நோ சங்க ப்ரசோதயாத்

என்று சங்கு காயத்திரி மந்திரத்தை 18 தடவை சொல்லி தூப, தீபம்ஆராதனை செய்து சங்கினை வழிபடவேண்டும்.

பின்னர் மகாலட்சுமி தேவியை நினைத்து,

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனதாயிகாயை ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை சர்வ தாரித்ரிய நிவாரணாயை ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா.

மந்திரத்தினை 108 தடவைக்கு குறையாமல் சொல்லி தூப, தீப,நைவேத்திய ஆராதனை செய்து பூசையை நிறைவு செய்ய வேண்டும். அந்த பூசையினை அதிகாலை வேளையில் செய்வதே சிறப்பாகும். தொட்ர்ந்து 48 நாட்கள் செய்ய எப்படிப்பட்ட தரித்திரத்திலிருந்தாலும் சகலமும் நீங்கி செல்வந்தனாகலாம். சங்கிலிருக்கும் தீர்த்தத்தினை மறுநாள் காலையில் தானும் அருந்தி வீட்டில் உள்ள மற்றவரிற்கும் அருந்தக் கொடுக்க வேண்டும். சிறிதளவு தீர்த்தத்தினை கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் தெளித்து விடுங்கள். தினமும் புதிதாக தீர்த்தம் தயார் செய்ய வேண்டும்.

தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை செய்யலாம். வெள்ளிக்கிழமை பூசை செய்து சனிக்கிழமை அன்று தீர்த்தத்தினை தானும் அருந்தி வீட்டில் உள்ள மற்றவரிற்கும் அருந்தக் கொடுக்க வேண்டும். சிறிதளவு தீர்த்தத்தினை கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் தெளித்து விடுங்கள். சங்கினை தட்டினில் வைத்து தூய நீர் நிரப்பி மறு வெள்ளி வரை தூப தீபம் காட்டி வழிபட்டு வரவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!