இன்றைய ராசிபலன் – (22-11-2024)
இன்றைய நாள் (22-11-2024)
குரோதி-கார்த்திகை 7-வெள்ளி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 9:00 – 10:00
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:15 – 1:15
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று இரவு 09.51 வரை ஆயில்யம் பின்பு மகம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
மூலம், பூராடம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
தனுசு
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும்.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும் நாள்.
மிதுனம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
கடகம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.
சிம்மம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
கன்னி
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
துலாம்
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசு அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்
சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
தனுசு
இன்று அனைத்துத் தரப்பினருக்குமே, அலைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். எனினும் உங்களது முயற்சி வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம். குறிப்பாக தொழில் அல்லது வியாபாரத்தில் திடீர் நஷ்டங்களை தவிர்க்க அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். போட்டிகள் அதிகரித்துக் காணப்படும். அதனால் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போராட வேண்டி இருக்கும். முடிந்த வரையில் பெரிய முதலீடுகளை நன்கு யோசித்து திட்டமிட்டு செய்யவும். புதிய கிளைகளை திறக்க இது ஏற்ற நேரம் இல்லை. இருப்பதை காப்பதே சற்று போராட்டமாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்கள் நீங்கள் செய்யும் பணியில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
மகரம்
உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.
கும்பம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மீனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்டநாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.