இன்றைய நாள் (18-09-2024) :
குரோதி-புரட்டாசி 2-புதன்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று பிற்பகல் 12.56 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
பூசம், ஆயில்யம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
கடகம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகளை விரைவாக முடித்து அனுப்பிவிடுவீர்கள். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
ரிஷபம்
தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.
மிதுனம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.
கடகம்
இன்று உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகரித்துக் காணப்படலாம். உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு அஜீரணம் சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். கணவன்-மனைவி இடையே, தேவை இல்லாத விவாதங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். குடும்பத்தில் சிக்கனமாக இருந்தும் கூட எதிர்பாராத செலவுகள் வருகிறதே என்று நீங்கள் வருந்த இடம் உண்டு. கொடுக்கல் – வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நம்பியவர்களே பணம் தராமல் இழுத்தடிக்கலாம். இதனால் மனம் கவலை கொள்ளலாம். இறைவனை மட்டும் நம்புங்கள். குல தெய்வ வழிபாடு இறுதியில் சோதனைகளை சாதனையாக மாற்றும்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
கன்னி
சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அனாவசியமாக அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்களும் உண்டு. விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.
துலாம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
விருச்சிகம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
தனுசு
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மகரம்
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் நன்கு யோசித்துச் செய்யவும். சக வியாபாரிகளால் மறைமுகப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும், அதனை சமாளித்து முன்னேறுவீர்கள். சிலருக்கு வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். வாகனத்தில் பழுது ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம். மற்றபடி, வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வரவும்.
மீனம்
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். துர்கையை தியானித்து வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.