இன்றைய நாள் (15-09-2024) :
குரோதி-ஆவணி 30-ஞாயிறு-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 3:15 – 4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 1:30 – 2:30
நட்சத்திரம்
இன்று மாலை 05.03 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
மிருகஷீருஷம், திருவாதிரை
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மிதுனம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
மிதுனம்
இன்று சிலருக்கு பிள்ளைகள் வழியில் சில மனக் கவலைகள் வந்து போக இடம் உண்டு. பல நேர்முக – மறைமுக எதிர்ப்புகளைக் கடந்து தான் முன்னேற வேண்டி இருக்கும். மற்றபடி, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும் கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். முடிந்த வரையில் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலுமே கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட இடம் இல்லை. விநாயக வழிபாடு சங்கடம் போக்கும்.
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதியசரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
சிம்மம்
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கன்னி
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.
துலாம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.
விருச்சிகம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.
தனுசு
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள்.
மகரம்
இன்று பொருளாதாரம் சற்று ஏற்ற – இறக்கமாகத் தான் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் தரப்படலாம். திடீர் பிரயாணங்களால் அலைச்சல் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. அதனால், முடிந்த வரையில் பிரயாணங்களை திட்டமிட்டுச் செய்யுங்கள். சக ஊழியர்களைக் கூட அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். வர வேண்டிய சலுகைகள் தாமதம் ஆகலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் கூட சரக்குகளை இறுதியில் போராடி விற்று விடுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்து சிலர் விலக நேரிடலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
கும்பம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
மீனம்
இன்று காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.