இன்றைய நாள் (14-09-2024) :
குரோதி-ஆவணி 29-சனி-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 9:30 – 10:30
நட்சத்திரம்
இன்று மாலை 05.57 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
ரோகிணி, மிருகஷீருஷம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
ரிஷபம் / மிதுனம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் உதவி செய்வார்கள்.
ரிஷபம்
உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் . நல்லன நடக்கும் நாள்.
கடகம்
சோர்வு, களைப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்
சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் சிலருக்கு மிகுந்த அலைச்சலுக்குப் பிறகே பலிதமாகும் நாள்.
கன்னி
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள்.
துலாம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.
விருச்சிகம்
குடும்பத்துடன் கலந்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
தனுசு
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.
கும்பம்
எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மீனம்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.