ஆன்மீகம்ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (11-09-2024): இந்த ராசியினருக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்!

இன்றைய நாள் (11-09-2024) :

குரோதி-ஆவணி 26-புதன்-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று மாலை 06.07 வரை கேட்டை பின்பு மூலம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

அசுபதி, பரணி

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

மேஷம்

இன்றைய ராசிபலன்கள்:-

மேஷம்

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். நிதானம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியைபைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

இதுவரை இருந்த கோபம், டென்ஷன் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. நன்மை நடக்கும் நாள்.

கடகம்

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். துர்கையை வழிபட தடைகள் விலகும்.

சிம்மம்

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களை சந்தித்துப் பேசுவீர்கள். வியாபாரத்தில் முக்கியமான பிரமுகர் ஒருவரின் அறிமுகமும், அவர் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உள்ளது. ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.

கன்னி

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை முழு ஒத்துழைப்பு தருவார். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் அலைச்சலுடன், சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணுவை வழிபட வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

துலாம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அமோகமாக நடைபெறுவதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

மீனம்

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும்.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!