ஆவணி மாதம் 31ம் தேதி சனிக்கிழமையான இன்று பிரதோஷ திதி அமைகிறது. பொதுவாக சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை “மகா பிரதோஷம்” என்று குறிப்பிடுவர்.
சிவபெருமான், அமுதம் கடைந்தபோது அதிலிருந்து வந்த விஷத்தை உண்டு, மீண்டும் உயிர் எழுந்து காட்சி கொடுத்த நாள் ஒரு சனிக்கிழமை திதியாகும். அதன் காரணமாகதான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ திதியை மகா பிரதோஷம் என்று குறிப்பிடுகிறார்கள்.
இது மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட பல மடங்கு விஷேசமானதாக இருக்கும். பொதுவாக பிரதோஷ நாளில் சிவன் சன்னதியில் சென்று மாலை 4.30 மணி முதல் 6.00 வரையில் சிவபெருமானை வழிபடுவது சிறந்தது.
மகா பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டு வந்தால் முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் கரையும் என்பது ஐதீகம். சனி பிரதோஷம் என்பது பல மாதங்களுக்கு ஒரு முறை வரும் விஷேசம் கொண்ட நாள். எனவே, இந்த ஆவணி மாத சனி பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபட்டு, வாழ்வில் நன்மையடைய அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.