Friday, January 24, 2025

எலுமிச்சையின் ஆன்மீக மகிமை!!

- Advertisement -

வாகனங்களில் எலுமிச்சை – மிளகாய் கட்டப்படுவதை பார்த்து உள்ளோம். உண்மையில் இது ஏன் கட்டப்படுகிறது?

மேற்கண்ட இக்கேள்விக்கு பதில் அளிக்கும் முன்னர் எலுமிச்சையின் மகத்துவத்தை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எலுமிச்சையை சாஸ்திரங்கள் ‘தேவ கனி’ என்றே விவரித்து சிறப்பிக்கிறது. அதனால், தான் தாந்த்ரீக சாஸ்திரத்தில் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலக சக்தியான – ஆதி சக்திக்கு எலுமிச்சை மாலை கூட போடப்படுகிறது. தீய ஆவிகளை துரத்தும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு என்பது ஆன்மீக வாதிகள் சிலர் கருத்து.

அந்த வகையில் தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது காரில் மட்டும் அல்ல கோயில்களில் கூட, திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது இந்தியாவில் மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. உடல் சோர்வு கொண்டவர்களுக்கு எலுமிச்சையின் வாசனை புத்துணர்ச்சி தரக்கூடியது. எலுமிச்சை ஈசனின் வடிவம் என்றால், அதில் உள்ள மஞ்சள் சக்தியின் வடிவம். மொத்தத்தில் எலுமிச்சை சிவ – சக்தி ஐக்கியம் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் நாம் எங்காவது வெளியில் சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் பயணம் மேற்கொண்டாலோ… தீய சக்திகளை அகற்ற உடன் எலுமிச்சையை எடுத்துச் செல்வது நல்லது.

அதோடு, வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், ஏதேனும் நல்ல காரியத்திற்கு வண்டியில் செல்லும் போது நமக்கும் வண்டிக்கும் சேர்த்து எலுமிச்சையை சுற்றி நான்கு திசைகளிலும் வீசுகிறார்கள். நான்கு திசைகளில் இருந்தும் எந்த கெட்ட சக்தியும் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான்கு மூலையிலும் வீசுகிறார்கள்.

- Advertisement -

இதுதவிர எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (Methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதி வரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால் தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வாகனங்களில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாக எலுமிச்சை – மிளகாய் கட்டுகிறோம்.

குறிப்பாக, வெள்ளிக் கிழமை இதனை கட்டுவதற்கும் கூட ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதன் படி வெள்ளிக் கிழமையில், பூமியானது சூரியனுக்கும் – சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது. அதே சமயத்தில், இதற்குப் பெரிய அளவில் ஆதாரமும் இல்லை. எனினும், ஆன்மீக வாதிகள் இதனை நம்புகின்றனர். மொத்தத்தில், மேற்சொன்ன விஷயங்கள் அனைத்துமே அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!