பசுவைத் துன்புறுத்தவே கூடாது என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன. பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம். நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
கேட்டதைக் கொடுக்கும் காமதேனு
பலருக்கும் பணக்கஷ்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்ன செய்தாலும், முன்னேற்றம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் சிறந்த வழிமுறை உள்ளது. காமதேனு பசு கன்றுடன் கூடிய சிலையை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள்.
காமதேனுவை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் உங்களுடைய செல்வ நிலை உயரும். பணவரவு அதிகமாகும்.
காமதேனு வழிபாடு, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் அற்புத வழிபாடு. காமதேனுவை வழிபட்டால் உங்களது வீடு சுபிட்சம் பெறும். மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.
எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?
காமதேனு விக்ரகத்தின் கொம்பு, நெற்றி, கால்கள், கன்று, பசுமாட்டின் மடி இவற்றிற்கு சந்தன குங்குமம் இட வேண்டும்.
மல்லிகை பூவை காமதேனுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு இந்த காமதேனுவை தொட்டு வணங்கி உங்களுடைய கோரிக்கைகளை மனதார வேண்டி கொள்ள வேண்டும்.
காமதேனு எவ்வளவு சிறப்பு பெறுகிறதோ அதேபோல் கண்ணனுடன் கூடிய காமதேனுவும் அதீத சிறப்பு பெறுகிறது.
வீட்டின் பூஜையறையில் பசுவும், கண்ணனும் ஒன்றாக இருக்கும் படத்தை வைத்து வழிபடுவதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பசுவும், கண்ணனும் இருக்கும் சிலையை வீட்டில் வாங்கி வழிபடுவது சிறந்தது.
கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது.கண்ணனுடன் கூடிய காமதேனு சிலையை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும்.
அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும் தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத் தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.
கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.
காமதேனு தெய்வீகப் பசு வேண்டியதைத் தரும் அற்புதமான தேவதை.
மந்திரம்
ஓம் சுபகாயை வித்மஹே காமதாத்திரியை சதீமஹி தந்னோ தேனு ப்ரசோதயத்
இந்த மந்திரத்தை தினமும் 54 முறை காமதேனு சிலை மீது உங்கள் கைகளை வைத்து சொல்லிவர வேண்டும். இதனால் எல்லா நன்மைகளும் செல்வங்களும் கிடைக்கும்.