மாலையில் மற்றவர்களுக்கு பணம், நகை கொடுக்கக் கூடாது என்று சொல்வது சரியா?

அந்திவேளை, சந்திவேளையில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர். இதில் அந்திவேளை என்பது உச்சி வெயில் காலம்; சந்திவேளை என்பது பகலும், இரவும் சந்திக்கும் மாலை/காலை நேரம். பொதுவாக இரவும், பகலும் இணையக் கூடிய காலத்தில் உடலியல் கூற்றுப்படி பிராண வாயு வெளிப்படுத்தும் விதம், உள்வாங்கும் விதத்தில் இருக்கும் என்பதால் மனம் நிலையாக இருக்காது. எனவே அந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டால் இழப்புகள் ஏற்படும் என்ற காரணத்தை மனதில் கொண்டே முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்தனர்.

குறிப்பாக, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மண்ணெண்ணை விளக்குகளின் உதவியுடன் முன்னோர்கள் செயல்பட்டனர். எனவே இரவு நேரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வதல் பல சிக்கல் ஏற்பட்டது. எவ்வளவு கொடுத்தோம் என்பதிலும் உறுதியற்ற நிலை இருந்திருக்கலாம்.

தற்போது மின்சார வசதி உலகம் முழுவதும் இருந்தாலும், மாலை 5.45 முதல் 6.30 மணி வரையிலான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பது, பணம் கொடுப்பது, வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்ல பலனளிக்கும். இங்கே பணம் கொடுப்பது என்று நான் குறிப்பிட்டது ரூ.50, 100 கடனாக வழங்குவதை அல்ல. மாறாக பல ஆயிரங்களை முதலீடு செய்வதையும், கடனாக வழங்குவதையும், முன்பணமாக வழங்குவதையும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும் தவிர்க்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கூறியுள்ளேன். ஒரு சிலர் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை தவற விட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் எனக் கூறலாம். அதுபோன்ற சமயத்தில் இனிப்பு அல்லது வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அல்லது கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!