Advertisement
ஆன்மீகம்

வாழ்வை வளமாக்கும் விநாயகர் வழிபாடு

எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது அனுபவரீதியான, திடமான நம்பிக்கை.

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

நமது தேவைக்கேற்றப்படி பல விதமான பொருட்களால் ஆவாஹனம் செய்து வழிபட்டு, அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.

மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டு பலன்:

மஞ்சளில் பிள்ளையார் (மஞ்சள் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால், சகல சௌபாகியங்களும் கிடைக்கும்.

குங்கும பிள்ளையார் வழிபாட்டு பலன்:

குங்குமத்தில் பிள்ளையார் (குங்கும பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

புற்று மண் பிள்ளையார் வழிபாட்டு பலன்:

புற்று மண்ணில் பிள்ளையார் (புற்று மண் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும்.

வெல்ல பிள்ளையார் வழிபாட்டு பலன்:

வெல்லத்தில் பிள்ளையார் (வெல்ல பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும்.

கடல் உப்பு பிள்ளையார் வழிபாட்டு பலன்:

கடல் உப்பில் பிள்ளையார் (கடல் உப்பு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாட்டு பலன்:

வெள்ளெருக்கில் பிள்ளையார் (வெள்ளெருக்கு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் பில்லி, சூனியம் விலகி, வாழ்வில் வளமும் நலமும் சேரும்.

விபூதி பிள்ளையார் வழிபாட்டு பலன்:

விபூதியில் பிள்ளையார் (விபூதி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கும்.

சக்கரை பிள்ளையார் வழிபாட்டு பலன்:

சக்கரையில் பிள்ளையார் (சக்கரை பிள்ளையார், சீனி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சக்கரை நோய் நீங்கும்.

பசுமாட்டு சாண பிள்ளையார் வழிபாட்டு பலன்:

பசுமாட்டு சாணத்தில் பிள்ளையார் (பசுமாட்டு சாண பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகி குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்க்கை அமையும். வியாபாரம் விருத்தியாகும்.

சந்தன பிள்ளையார் வழிபாட்டு பலன்:

சந்தனத்தில் பிள்ளையார் (சந்தன பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

வாழைப்பழ பிள்ளையார் வழிபாட்டு பலன்:

வாழைப்பழத்தில் பிள்ளையார் (வாழைப்பழ பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் குடும்பம் விருத்தியாகும்.

வெண்ணை பிள்ளையார் வழிபாட்டு பலன்:

வெண்ணையில் பிள்ளையார் (வெண்ணை பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் கடன் மற்றும் அனைத்து கடன்களும் நீங்கி வளம் பெருகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!