
உலகம் அறிந்தது அறிவியல் நமக்கு இந்து மத பொக்கிஷம்
பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது. பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது, அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது, பூமியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது. அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது. இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது.
இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு – தெற்காக நிற்க்கும். இதை, இயற்பியல் மின்காந்த புலம், காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன. காந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம், காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும். தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல்
இதே தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது. உடலில் இரத்ததில் முக்கிய பாகம் இரும்பு சத்தாகும். மேலும் பகலில் உட்காரும் போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும்.தூங்கும் போது தெற்கே தலை வைத்து கொண்டால், நமது வடதுருவமும், பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும்.
ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால், பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது. ஒன்றையொன்று தாக்கி, தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய இயற்கையான நிலை மாறுபடும்.
எனவேதான்,வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது. நம்ம முன்னோர்கள் சொல்வது பழைய பஞ்சாங்கம் என்று ஒதுக்கினால் பாதிக்க படுவது நாம் தான்.
இது ஓலைச்சுவடி என்ற ஒரு நூலில் அழகாக விஞ்ஞான பூர்வமாக போட்டுள்ளனர். இது மட்டுமன்று நாம் அன்றாடம் செய்ய வேண்டியவை செய்ய கூடாதவைகள் அனைத்தும் அதில் அடங்கும்.