இன்றைய நாள் (30-08-2024) :
குரோதி-ஆவணி 14-வெள்ளி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 12:15 – 1:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1:45 – 2:45
மாலை 6:00 – 7:30
நட்சத்திரம்
இன்று இரவு 09.09 வரை புனர்பூசம் பின்பு பூசம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
விசாகம், அனுஷம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
விருச்சிகம்
இன்றைய ராசிபலன்கள்:-
மேஷம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
குடும்பத்துடன் கலந்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
மிதுனம்
இன்று சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.
கடகம்
இன்று தந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சிம்மம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தருவதாக இருக்கும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.
துலாம்
தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
மகரம்
இன்று எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.
கும்பம்
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
மீனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.