ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (24-01-2025)

இன்றைய நாள் (24-01-2025)

குரோதி-தை 11-வெள்ளி-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 12:30 – 1:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 1:30 – 2:30

மாலை 6:30 – 7:30

திதி

தசமி மாலை 6.22 வரை பின்பு ஏகாதசி.

யோகம்

இன்று முழுவதும் சித்தயோகம்

நட்சத்திரம்

விசாகம் அதிகாலை 4.29 வரை பின்பு அனுஷம் முழுவதும்.

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பரணி

இன்றையராசிபலன்கள் :-

மேஷம் :

இன்று ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

ரிஷபம் :

இன்று அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உங்களின் கவனக்குறைவால் மேலதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். கவனம் தேவை.

மிதுனம் :

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முறையில் காரியங்கள் கை கூடி வரும். ஆனாலும் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. உடன் பணி புரிபவர்களால் நன்மை ஏற்படும்.

கடகம் :

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் நடக்கும். ஆனாலும் மூன்றாவது மனிதரின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

சிம்மம் :

இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன, மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.

கன்னி :

இன்று பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் சூரியன் 6ல் மறைவு பெறுவதால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மேலிடத்தின் கனிவான பார்வை பெறுவீர்கள். முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

துலாம் :

இன்று பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. கல்வி சம்பந்தமான விஷயங்களில் வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

விருச்சிகம் :

இன்று மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் பணவரவு இருக்கும். ஆனாலும் திடீர் போட்டி இருக்கும்.

தனுசு :

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நேரத்தை வீணடித்தல் கூடாது. முடிந்தவரை வாக்கு கொடுக்கும் முன் சிந்தித்து வாக்கு கொடுக்கவும். உத்தியோக உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

மகரம் :

இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கும்பம் :

இன்று மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. ஆனாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.

மீனம் :

இன்று எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலிடத்தின் அனுசரனை கிடைக்கும். சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். புதியதாக ஆரம்பிக்கும் எந்த விஷயத்திலும் ஏற்றம் உண்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!