இன்றைய நாள் (17-07-2024) :
குரோதி-ஆடி 1-புதன்-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று அதிகாலை 01.00 வரை விசாகம் பின்பு அனுஷம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
ரேவதி
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மீனம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
இன்று அலைச்சல் சற்று அதிகமாகக் காணப்படும். பிரயாணங்களை திட்டமிட்டு இனி வரும் நாட்களில் மேற்கொள்ளுங்கள். எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு இரு முறை சென்று முடிக்க வேண்டி வரலாம். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு, அசதி தென்பட இடம் உண்டு. சிலருக்கு அவ்வப்போது சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போகலாம். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக திடீர் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும், இறுதியில் சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.
மிதுனம்
எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கடகம்
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அம்பிகையை தியானித்து வழிபட செயல்கள் அனைத்துமே சாதகமாக முடியும்.
சிம்மம்
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
கன்னி
தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று துர்க்கையை வழிபட காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியும்.
துலாம்
இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.
விருச்சிகம்
இன்று வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வரவும். எதிலும் பொறுமையுடன் இருந்தீர்கள் என்றால் ஏற்றமான பலன்களை காணுவீர்கள். முடிந்தவரையில் நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கூட நீங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள். குல தெய்வ வழிபாடு சோதனைகளைக் குறைக்கும்.
தனுசு
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
மகரம்
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை மற்றவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு நாளைத் தொடங்க, அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
கும்பம்
தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.
மீனம்
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.