இன்றைய நாள் (31-08-2024) :
குரோதி-ஆவணி 15-சனி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:15 – 1:15
மாலை 9:30 – 10:30
நட்சத்திரம்
இன்று இரவு 10.14 வரை பூசம் பின்பு ஆயில்யம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
அனுஷம், கேட்டை
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
விருச்சிகம்
இன்றைய ராசிபலன்கள்:-
மேஷம்
முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.
ரிஷபம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும்.
மிதுனம்
மகிழ்ச்சியான நாள். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும்.
கடகம்
இன்று பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
சிம்மம்
இன்று காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
கன்னி
இன்று எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
விருச்சிகம்
புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், இறுதியில் அதுவும் கூட சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும்.
தனுசு
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும்.
மகரம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். மீனாட்சி அம்மனை வழிபட சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
மீனம்
ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமையடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.