Advertisement
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் – (27-09-2024)

இன்றைய நாள் (27-09-2024) :

குரோதி-புரட்டாசி 11-வெள்ளி-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 12:00 – 1:00

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று அதிகாலை 04.32 வரை புனர்பூசம் பின்பு பூசம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

கேட்டை

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

விருச்சிகம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்றைய தினம் உத்யோகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், பணவரவு இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். ஓரளவு தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு, சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில அனுகூலப் பலன்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

வீடு, நிலம், வாங்கும் சமயத்தில் கூடுதல் கவனத்தை மேற்கொள்ளவும். பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்கள் சம்மந்தமான பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். மாணவர்கள் முயற்சி வீண் போகாது. சிலருக்குத் திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தை நல்ல படியாக நடந்தேறும். மற்றபடி, தொழில் – வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். உத்யோகஸ்தர்கள் பணியில் அலட்சியம் காட்ட வேண்டாம். மேலதிகாரிகள் உங்களை அதிகம் கண்காணிப்பார்கள். அதனால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுங்கள்.

மிதுனம்

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கடுமை காட்ட வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முருகப்பெருமான் வழிபாடு நுன்று.

கடகம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தருவதாக இருக்கும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

கன்னி

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

துலாம்

இன்று சிலருக்கு தொழில் அல்லது வியாபார ரீதியாக அரசு உதவிகள் கிடைக்க இடம் உண்டு. தொழில் ரீதியாக இருந்து வந்த நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் கூட நல்ல படியாக ஒரு முடிவுக்கு வரும். நல்ல விதத்தில் பொருட்களை சந்தைப்படுத்தி நீங்கள் லாபங்களைப் பெறுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் கூட திரும்பி வருவார்கள். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் மட்டும் நன்கு ஆலோசித்து திட்டமிட்டுச் செய்யுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். பெண்களைப் பொறுத்தவரையில், புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை அல்லது உத்யோக ரீதியாக நல்ல திருப்பு முனைகள் எல்லாம் ஏற்படும். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள்.

விருச்சிகம்

இன்றைய தினம், உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு உணவு சம்மந்தமாக ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட இடம் உண்டு. பயணங்களில் குறிப்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். சில பயணங்கள் அலைச்சலை தரலாம். அதனால் பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் புதிய போட்டியாளர்களைக் களத்தில் சந்திப்பீர்கள். அதிக தொழில் போட்டியின் காரணமாக சிலரால் நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை காணப்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரையில், கணவன்-மனைவி இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதிப் பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

கும்பம்

உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!