Advertisement
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (26-07-2024): இந்த ராசியினருக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்!

இன்றைய நாள் (26-07-2024) :

குரோதி-ஆடி 10-வெள்ளி-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 1:15

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று இரவு 07.00 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

ராகு

10.30 AM – 12.00 PM

குளிகை

7.30 AM – 9.00 AM

எமகண்டம்

3.00 PM – 4.30 PM

திதி

இன்று காலை 06.10 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்

இன்று சித்தயோகம் 32.25 மேல் அமிர்தயோகம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பூசம், ஆயில்யம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

கடகம்

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

கணவன் – மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போனாலும் கூட அதனால் ஒற்றுமை குறைய வாய்ப்பில்லை. புதிய முயற்சிகள் அலைச்சல் தந்தாலும் கூட இறுதியில் சாதகமாகத் தான் முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அதனை சமாளித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள்.

மிதுனம்

இன்று பண வரவு உங்களது தேவைக்கு ஏற்றபடி இருக்கும். பெரும்பாலும் நீங்கள் வளமான பலன்களைத் தான் பெறுவீர்கள். உங்களுடைய தேவைக்கேற்ப பொருளாதார நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். நல்ல நட்புகள் சிலருக்கு ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் உங்களது கை ஓங்கும். போட்டிகள் இருந்தாலுமே கூட எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விடுவீர்கள். சிலர் பழைய கடனை முற்றிலும் அடைப்பீர்கள். நல்ல திருப்பங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏற்படும். உத்யோகத்தில் கூட நல்ல திருப்பங்கள் ஏற்படும் நல்ல நாள்.

கடகம்

இன்று தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்து வந்த போராட்டங்கள் குறையும் அல்லது நீங்கும். கொடுத்த கடன் சிலருக்கு வசூல் ஆகும். சிலர் பழைய கடன்களை அடைப்பார்கள். சிலர் புதிய கிளைகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியாகப் புதிய கூட்டாளிகள் சிலருக்கு அறிமுகம் ஆவார்கள். வியாபாரத்தில் இழந்து போன பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். சிலருக்குத் தொழில் ரீதியாக நல்ல திருப்புமுனைகள் ஏற்படும். சிலருக்கு அரசு வகையில் ஆதரவு கூட கிடைக்கப்பெறும். மொத்தத்தில் தொழில், வியாபாரத்தில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். உத்யோகத்தில் கூட திறமையாக சிலர் செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

சிம்மம்

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு ஒரே சமயத்தில் இரண்டு – மூன்று வேலைகளை முடிக்க வேண்டி வரலாம். இதனால் உடல் சோர்வு, அசதி தென்படலாம். எனினும் பிற்காலங்களில் இதற்கான நல்ல பலன்களை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். உங்களது அலைச்சல் வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம்.

துலாம்

நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் செயல்கள் கூட சின்ன அளவில் மன வருத்தங்களை தரலாம் என்பதால் கூடுதல் கவனமாக எதிலும் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். சுப காரிய பேச்சு வார்த்தைகளை கூட சில காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதம் ஆகி அதன் பின்னர் கிடைக்கப் பெறலாம். முடிந்த வரையில் தேவை இல்லாத பயணங்களை முன்பே இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள்.

விருச்சிகம்

ஓரளவு பணவரவு இருந்தாலும் கூட சுப விரயச்செலவும் உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் இறுதியில் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி சிலருக்கு கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

தனுசு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு பொருளாதாரம் ஓரளவு சிறக்கும்.

மகரம்

இன்று உத்யோகம் வழக்கம் போலவே இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் மட்டும் அல்ல, சில சமயங்களில் எதிர்பாராத இடத்தில் இருந்து கூட உங்களுக்கு உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுப காரியங்கள் அலைச்சலை தந்தாலுமே இறுதியில் எல்லாமே நல்ல படியாக நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் சிறு, சிறு நெருக்கடிகள் வந்தாலுமே கூட அதனை சமாளித்து விடுவீர்கள். தொழில் ரீதியாக வளர்ச்சி உண்டு. எனினும், தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களால் சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதிப்பீர்கள்.

கும்பம்

இன்று தொழில் அல்லது வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். நல்ல முதலீட்டை மேற்கொண்டு நன்மை கூட அடைவீர்கள். ஒரு உயர்வான நிலையை இந்தக் கால கட்டத்தில் பெறுவீர்கள். குடும்பத்தில் மட்டும் சிற்சில வாக்குவாதங்கள் வந்து போகலாம். எனினும், பெரிய பாதிப்புகளுக்கு இடம் இல்லை. பிற்பகலுக்கு மேல், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணவரவு சிறப்பாக இருக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சுப காரியங்கள் எல்லாம் நல்ல படியாக கைகூடி நன்மை தரும். வீண் மருத்துவ செலவுகள் குறையும். மொத்தத்தில், இது ஒரு நல்ல நாள்.

மீனம்

இன்றைய தினம், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானமாகச் சென்று வாருங்கள். பொருளாதாரம் அதிக ஏற்ற இறக்கமாக இருக்கும். திடீர் செலவுகள் உங்களை திக்கு முக்காட வைக்கும். அதனால் முடிந்த வரையில் சிக்கனத்தை கடைபிடிக்கப் பாருங்கள். எதையும் பட்ஜெட் போட்டுச் செய்யுங்கள். சிலருக்கு வீடு, வாகனம் சம்மந்தமாகப் பராமரிப்புச் செலவுகள் கூட அதிகரித்துக் காணப்படலாம். குடும்பத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் சில அலைச்சலைத் தந்தாலும் கூட, இறுதியில் எல்லாம் நல்ல படியாகவே நடந்தேறும். கணவன் – மனைவி இடையே சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தாலும் கூட அதனால் ஒற்றுமை குறைய வாய்ப்பு இல்லை. பங்குச் சந்தை, யூக வணிகம் போன்றவை நன்மையைச் செய்யாது. அதனால் மேற்கண்டவற்றில் முதலீடுகளை நன்கு யோசித்துச் செய்யவும். அதிலும் பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் மிகவும் நிதானமாக இருந்து கொள்ளவும். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில் அல்லது வியாபாரத்தில் போராடியே லாபம் ஈட்டும் படி இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!