இன்றைய நாள் (25-07-2024) :
குரோதி-ஆடி 9-வியாழன்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:15 – 1:15
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று இரவு 08.41 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
ராகு
1.30 PM – 3.00 PM
குளிகை
9.00 AM – 10.30 AM
எமகண்டம்
6.00 AM – 7.30 AM
கரணம்
3.00 PM – 4.30 PM
திதி
இன்று காலை 08.40 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்
இன்று முழுவதும் சித்தயோகம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
புனர்பூசம், பூசம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
கடகம்
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம்
இன்றைய தினம், உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்
இன்றைய தினம் எல்லாமே இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை சிலருக்கு இருக்கலாம். எனினும் கவலை கொள்ளாதீர்கள். இது தற்காலிக பலனே! திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் ஏற்படலாம். எனினும், இறுதியில் எல்லாம் இனிதே நடந்தேறும். அதனால் கவலை வேண்டாம். தொழிலை விருத்தி செய்யும் எண்ணத்தை மட்டும் சிறிது காலம் தள்ளி வைப்பது நலல்து. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாகத் தான் இருக்கும். எனினும் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கப்பெறும். சொந்தபந்தங்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம்.
மிதுனம்
இன்றைய தினம் எண்ணற்ற நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் இது நாள் வரையில் இருந்து வந்த தடைகள் விலகும். தொழில் அல்லது வியாபாரத்தில், எந்த ஒரு எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உத்யோகம் வழக்கம் போலவே இருக்கும். உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு தேவை. சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கி மகிழ்வார்கள். உற்றார் – உறவினர்கள் ஆதரவு கூட உங்களுக்கு நன்மை தரும். சண்டை போட்டு சென்றவர்கள் கூட சிரித்தபடி வந்து சேருவார்கள். சிலர் தெய்வ தரிசனங்களைக் கூட மேற்கொள்வீர்கள். மொத்தத்தில், பெரும்பாலும் நல்ல பலன்கள் ஏற்படும் நல்ல நாள் இந்த நாள்.
கடகம்
இன்றைய தினம், பொருளாதாரம் நல்ல படியாக மேம்படும். சிலருக்குப் பழைய கடன்கள் கூட அடைபடும். சிலருக்கு வீடு, வாகன யோகம் கூட கிடைக்கப்பெறும். உங்களது வெகு நாள் ஆசைகள் நல்ல படியாக நிறைவேறும். உத்யோகத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த தடைகள் விலகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், சலுகைகள், சம்பள உயர்வு போன்றவை கூடக் கிடைக்கப்பெறும். சிலர் நல்ல வேலைக்கு மாறுவார்கள். சிலருக்கு உத்யோகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் தீரும். சிலருக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கூட கிடைக்கப்பெற இடம் உண்டு. புதிதாக வேலை தேடும் அன்பர்களுக்குக் கூட தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் வெற்றி தரும். சிலர் வேலையை விட்டு சுய தொழில் தொடங்குவீர்கள். இது ஒரு நல்ல நாள்.
சிம்மம்
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.
கன்னி
இன்று வெளி இடங்களில் சாப்பிடும் போது கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மருத்துவர் அறிவுரை இல்லாமல் நீங்களாக மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சற்று தாமதம் ஆகி இறுதியில் நல்ல படியாக நடந்தேறும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மற்றபடி, செலவுகள் அதிகரித்துக் காணப்படலாம். அதே சமயத்தில் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கூட உங்களுக்குக் கிடைக்கப்பெறும். அதனால், எதையும் சமாளிக்கும் தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும்.
துலாம்
இன்றைய தினம், சுப காரிய பேச்சு வார்த்தைகள் பெரும்பாலும் நன்மை தரும். வீடு, வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். இதனால் சுப விரயங்கள் ஏற்படும். தொழிலை சிலர் நல்ல முறையில் அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் திறமையான வேலை ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கப்பெறும். உத்யோக ரீதியாக சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல பலன்களே ஏற்படும். அதிலும், பெண்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும் நல்ல நாள்.
விருச்சிகம்
இன்றைய தினம், உடல் ஆரோக்கியம் மேம்படும். பலருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். சிலருக்குப் பூர்வீக சொத்து விஷயங்களில் வழக்குகள் தீரும். பெரும்பான்மையான பிரச்சனைகள் சுமூகமாகப் பேசித் தீர்க்கப்படும். தந்தை வழியில் கூட சிலருக்கு நன்மைகள் உண்டு. தந்தையின் உடல் ஆரோக்கியம் கூட மேம்படும். சிலருக்கு இளைய சகோதர உறவுகளால் நன்மை உண்டு. சிலருக்கு வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு கூட கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுப காரியப் பேச்சுக்கள் நல்ல படியாக நடந்தேறும். தொழில், வியாபாரம் வெற்றிகரமாக இருக்கும். உத்யோகத்தில் கூட நல்ல திருப்பங்கள் எல்லாம் ஏற்படும். மொத்தத்தில், நன்மைகள் ஏற்படும் நல்ல நாள் இந்த நாள்.
தனுசு
இன்றைய தினம் தொழில் அல்லது வியாபாரத்தில், புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை கூடப் படிப்படியாகக் குறையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவார்கள். அரசு வகையில் கூட சிலருக்கு ஆதரவு அல்லது அனுகூலம் கிடைக்கப்பெறும். கணவன் – மனைவி இடையே சின்னச், சின்ன கருத்து வேற்றுமைகள் வந்தாலும் கூட ஒற்றுமை குறையாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சிலர் செலவு செய்து நல்ல வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தடைபட்டு வந்த சலுகைகள் கிடைக்கப்பெறும். இது ஒரு நல்ல நாள்.
மகரம்
இன்றைய தினம் சிலருக்கு, எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு, வாகனம் சம்மந்தமாக சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். செய்யும் தொழிலில் போட்டிகளை கடந்து சாதிப்பீர்கள். மொத்தத்தில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டு. வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும். உத்யோகத்தில் கூட நல்ல திருப்பங்கள் எல்லாம் ஏற்படும்.
கும்பம்
இன்றைய தினம், உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து அன்பு பாராட்டுவார்கள். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்து வரும். உத்யோகத்தில், நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலைத் தந்தாலுமே கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். கொடுத்த வாக்குறுதிகளை நல்ல படியாக நிறைவேற்றுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களிடத்தில் திரும்பி வருவார்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு திடீர் வேலை மாற்றம் ஏற்படலாம். அது பிற்காலத்தில் நன்மை தரும் விதத்தில் இருக்கும். இப்படியாகப் பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
மீனம்
இன்றைய தினம், நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரித்துக் காணப்படும். முடிந்த வரையில் எதிலும் நீங்கள் சிக்கனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். கொடுத்த கடன் திரும்பி வர இறைவனை அதிகம் வேண்டிக் கொள்ளுங்கள். பண விஷயமாக சிலருடன் வீண் மனஸ்தாபங்கள் வந்து போக இடம் உண்டு. முடிந்த வரையில் பணம் சம்மந்தமாக பிறருக்கு வாக்குறுதி தர வேண்டாம். அதிக தொகையை கையாளும் சமயத்தில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மற்றபடி, தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். அப்போது தான் அடைய வேண்டிய இலக்கை ஓரளவேனும் உங்களால் அடைய முடியும். உத்யோகத்தில் வேலைப்பளு, அலைச்சல், டென்ஷன் தவிர்க்க முடியாது.