இன்றைய நாள் (23-07-2024) :
குரோதி-ஆடி 7-செவ்வாய்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1:45 – 2:45
மாலை 7:30 – 8:30
நட்சத்திரம்
இன்று அதிகாலை 01.05 வரை திருவோணம் பின்பு இரவு 11.47 வரை அவிட்டம் பின்பு சதயம்
ராகு
3.00 PM – 4.30 PM
திதி
இன்று பிற்பகல் 01.13 வரை துவிதியை பின்பு திரிதியை
யோகம்
இன்று முழுவதும் மரணயோகம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
மிருகசீருஷம், திருவாதிரை
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மிதுனம்
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்
அசையும் – அசையா சொத்துக்கள் சம்பந்தமாக வீண் செலவுகள் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. அலைச்சல் அதிகரித்துக் காணப்படும் என்பதால் பயணங்களை நன்கு திட்டமிட்டுச் செய்யுங்கள். எனினும், உங்களது முயற்சிகளுக்கு உரிய நல்ல பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகாது. தொழில் ரீதியாகப் போட்டி, பொறாமைகள் இருந்தாலும் கூட இறுதியில் நீங்கள் அதனை எல்லாம் சமாளித்து வெல்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்று சிலருக்கு தொழில் அல்லது வியாபார ரீதியாக அரசு உதவிகள் கிடைக்க இடம் உண்டு. தொழில் ரீதியாக இருந்து வந்த நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் கூட நல்ல படியாக ஒரு முடிவுக்கு வரும். நல்ல விதத்தில் பொருட்களை சந்தைப்படுத்தி நீங்கள் லாபங்களைப் பெறுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் கூட திரும்பி வருவார்கள். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் மட்டும் நன்கு ஆலோசித்து திட்டமிட்டுச் செய்யுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். பெண்களைப் பொறுத்தவரையில், புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை அல்லது உத்யோக ரீதியாக நல்ல திருப்பு முனைகள் எல்லாம் ஏற்படும். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள்.
கடகம்
இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். உத்யோகத்தில் அலைச்சல், டென்ஷன் தவிர்க்க முடியாது. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். பெண்கள் குடும்பப் பிரச்சனைகளை அந்நிய நபர்களிடத்தில் சொல்ல வேண்டாம். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் கூடுதல் கவனம் தேவை. பொன், நகை, ஆபரணங்களை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்துத் தரப்பினருமே எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நாள்.
சிம்மம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்
கன்னி
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல்நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
விருச்சிகம்
புதிய கோணத்தில் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிபிறக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
தனுசு
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
குடும்பத்துடன் கலந்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
கும்பம்
சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
மீனம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.