இன்றைய நாள் (22-10-2024) :
குரோதி-ஐப்பசி 5-செவ்வாய்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 7:30 – 8:30
நட்சத்திரம்
இன்று காலை 11.55 வரை மிருகஷீரிஷம் பின்பு திருவாதிரை
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
சுவாதி, விசாகம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
துலாம் / விருச்சிகம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் முயற்சி மூலம் இலக்கை அடைவீர்கள். உங்களிடம் தைரியமும் உறுதியும் நிறைந்து காணப்படும். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம்
இன்று வளர்ச்சி குறைவாக காணப்படும். பெரிய லட்சியங்களை அடைய இன்று சாத்தியம் குறைவாக இருக்கும். சிறப்பாக திட்டமிட்டால் இன்று வெற்றி அடையலாம்.
மிதுனம்
இன்று அமைதியாக மகிழ்ச்சியாக இருங்கள். வெற்றி பெறுவதற்கு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் பணியில உங்களுக்கு திருப்தி காணப்படாது. உறுதியுடனும் கவனமாகவும் பணியாற்ற வேண்டும்.
கடகம்
இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள். தெய்வீகப் பாடல்களை கேட்பதன் மூலம் நீங்கள் ஆறுதலைப் பெறலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.
சிம்மம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று எடுக்கும் முக்கியமான முடிவுகள் நற்பலன்களைத் தரும்.
கன்னி
குறைந்த முயற்சியில் உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். இன்று நகைச்சுவை போக்கின் காரணமாக சிறந்ததை சாதிப்பீர்கள். சிக்கலான பணகளைக் கூட எளிதில் கையாள்வீர்கள். இன்று உங்களுக்கு புதிய பணிகள் வழங்கப்படும். நீங்கள் அதனை விரும்பி செய்வீர்கள்.
துலாம்
விஷயங்களைக் கையாள்வதில் நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று சிறிதளவு பொறுமை அவசியம். இன்று அதிக பணிச்சுமை காணப்படும். ஆனால் முறையான திட்டமிடல் மூலம் சிறப்பாக செயலாற்றலாம். உங்கள் சக பணியாளர்களை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்
இன்று சற்று சிரமமான நாள். இன்று பொறுமையும் உறுதியும் மிகவும் அவசியம். சரியான திட்டமிடல் மிகவும் அவசியம். இன்று பணிச்சூழல் பரபரப்பாக காணப்படும். உங்கள் சக பணியாளர்களுடன் சில சிக்கல்கள் காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிடுவது நல்லது.
தனுசு
பிரார்த்தனை மற்றும் தியானம் இன்று உங்களுக்கு வழி காட்டும். அதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள். இன்று அனைத்தும் உங்கள் கைகளில் தான் உள்ளது. இன்று நல்ல ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் காணப்படுவீர்கள். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். இசையைக் கேளுங்கள்.
மகரம்
இன்று உங்களிடம் தைரியமும் உறுதியும் காணப்படும். இதனால் வளர்ச்சி காணப்படும். தைரியமான மனவலிமை காரணமாக வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் அபாரமான வளர்ச்சி காணப்படுகின்றது. பணியின மூலம் ஆதாயம்பெற இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம்
இன்று நீங்கள் அமைதியான அனுசரனையான போக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. வெற்றியும் கிடைக்கும். நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். இல்லாவிடில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
இன்று சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழலில் சிறப்பாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். சில தேவையற்ற சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழலில் பணம்செலவு செய்ய நேரும். சேமிப்பதற்கான வாய்ப்பு குறையும்.