இன்றைய நாள் (22-09-2024) :
குரோதி-புரட்டாசி 6-ஞாயிறு-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 3:15 – 4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 1:30 – 2:30
நட்சத்திரம்
இன்று காலை 06.42 வரை பரணி பின்பு கிருத்திகை
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
ஹஸ்தம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
கன்னி
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
இன்று உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். அது மட்டும் அல்ல, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கக் கூட சற்று தாமதம் ஆகலாம். மொத்தத்தில், கோபமாகப் பேசுவதை தவிர்த்து பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்கவும். சிலருக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு விலகலாம். தந்தை வழி சொந்தபந்தங்கள் உடன் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணியில் கவனக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகம் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சேர்ந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
மிதுனம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்
கணவன் – மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போனாலும் கூட அதனால் ஒற்றுமை குறைய வாய்ப்பில்லை. புதிய முயற்சிகள் அலைச்சல் தந்தாலும் கூட இறுதியில் சாதகமாகத் தான் முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அதனை சமாளித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள்.
சிம்மம்
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி காணலாம்.
கன்னி
இன்று பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். முடிந்த வரையில் எதிலும் நீங்கள் சிக்கனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். கொடுத்த கடன் திரும்பி வர இறைவனை அதிகம் வேண்டிக் கொள்ளுங்கள். பண விஷயமாக சிலருடன் வீண் மனஸ்தாபங்கள் வந்து போக இடம் உண்டு. முடிந்த வரையில் பணம் சம்மந்தமாக பிறருக்கு வாக்குறுதி தர வேண்டாம். அதிக தொகையை கையாளும் சமயத்தில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மற்றபடி, தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உத்யோகத்தில் அதிக வேலை பளு தவிர்க்க முடியாது. அலைச்சல் மிக்க நாள்.
துலாம்
வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு ஒரே சமயத்தில் இரண்டு – மூன்று வேலைகளை முடிக்க வேண்டி வரலாம். இதனால் உடல் சோர்வு, அசதி தென்படலாம். எனினும் பிற்காலங்களில் இதற்கான நல்ல பலன்களை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். உங்களது அலைச்சல் வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம்.
விருச்சிகம்
நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் செயல்கள் கூட சின்ன அளவில் மன வருத்தங்களை தரலாம் என்பதால் கூடுதல் கவனமாக எதிலும் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். சுப காரிய பேச்சு வார்த்தைகளை கூட சில காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதம் ஆகி அதன் பின்னர் கிடைக்கப் பெறலாம். முடிந்த வரையில் தேவை இல்லாத பயணங்களை முன்பே இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள்.
தனுசு
ஓரளவு பணவரவு இருந்தாலும் கூட சுப விரயச்செலவும் உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் இறுதியில் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி சிலருக்கு கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
மகரம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு பொருளாதாரம் ஓரளவு சிறக்கும்.
கும்பம்
இன்று உத்யோக ரீதியாக பல காலங்களாக எதிர்பார்த்த சலுகைகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கப்பெறும். மொத்தத்தில் உத்யோக ரீதியாக புதிய பொறுப்புகள் தேடி வரும். அதனால் ஆதாயம் ஏற்படவும் இடம் உண்டு. பெண்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். தாயாரின் தேவைகளை சிலர் பூர்த்தி செய்வீர்கள். பங்காளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு ஒரு முடிவுக்கு வரும்.
மீனம்
ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.