Advertisement
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (22-07-2024) : இந்த ராசியினருக்கு எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும்!

இன்றைய நாள் (22-07-2024) :

குரோதி-ஆடி 6-திங்கள்-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 6:00 – 7:00

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 9:15 – 10:15

மாலை 7:30 – 8:30

நட்சத்திரம்

இன்று அதிகாலை 02.07 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

திதி

இன்று மாலை 03.11 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்

இன்று அமிர்தயோகம் 47.41 மேல் சித்தயோகம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

ரோகிணி, மிருகசீருஷம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

ரிஷபம்

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

மிதுனம்

இன்று அனைத்துத் தரப்பினருக்குமே, அலைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். எனினும் உங்களது முயற்சி வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம். குறிப்பாக தொழில் அல்லது வியாபாரத்தில் திடீர் நஷ்டங்களை தவிர்க்க அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். போட்டிகள் அதிகரித்துக் காணப்படும். அதனால் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போராட வேண்டி இருக்கும். முடிந்த வரையில் பெரிய முதலீடுகளை நன்கு யோசித்து திட்டமிட்டு செய்யவும். புதிய கிளைகளை திறக்க இது ஏற்ற நேரம் இல்லை. இருப்பதை காப்பதே சற்று போராட்டமாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்கள் நீங்கள் செய்யும் பணியில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.

கடகம்

இதுவரை இருந்த கோபம், டென்ஷன் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. நன்மை நடக்கும் நாள்.

சிம்மம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கன்னி

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

மகரம்

இன்று நீங்கள் நல்லதாகவே நல்ல நோக்கத்தில் கருத்துக்களை சொன்னாலுமே பிறர் அதனை தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். நியாயப் படி கிடைக்க வேண்டிய பண வரவுகள் சரியான நேரத்தில் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். கணவன்-மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்து முன்னேறப் பாருங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய எதிர்ப்புகளைக் கடந்தே முன்னேறுபடியாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறைக்குப் பல முறை நன்கு யோசித்து செயல்படுங்கள். உத்யோகத்தில் வேலை பளு தவிர்க்க முடியாது.

கும்பம்

தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் உதவி செய்வார்கள்.

மீனம்

காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!