இன்றைய நாள் (21-09-2024) :
குரோதி-புரட்டாசி 5-சனி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 3:15 – 4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 9:30 – 10:30
நட்சத்திரம்
இன்று காலை 08.03 வரை அஸ்வினி பின்பு பரணி
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
உத்திரம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
சிம்மம் / கன்னி
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
இன்று சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அல்லது துறை மாற்றங்கள் அலைச்சலைத் தரலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்களே நேரடியாகச் செய்யுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லப்பாருங்கள். வேலை பளு அதிகம் இருக்கிறதே என்று வேலையை விட்டு விடாதீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கூட இப்போதைக்கு கிடைக்கும் வேலையை செய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகளுக்கு இடையே லாபம் பார்க்க வேண்டிய நிலை காணப்படும். அதே சமயத்தில், சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து உதவிகளும் கிடைக்கப்பெறும். மற்றபடி செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் இறுதியில் சமாளித்து விடுவீர்கள்.
ரிஷபம்
மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் தடைகளைத் தகர்த்துக்கொள்ளலாம்.
மிதுனம்
சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.
கடகம்
எல்லாமே இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை சிலருக்கு இருக்கலாம். எனினும் கவலை கொள்ளாதீர்கள். இது தற்காலிக பலனே! திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் ஏற்படலாம். எனினும், இறுதியில் எல்லாம் இனிதே நடந்தேறும். அதனால் கவலை வேண்டாம். தொழிலை விருத்தி செய்யும் எண்ணத்தை மட்டும் சிறிது காலம் தள்ளி வைப்பது நலல்து. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாகத் தான் இருக்கும். எனினும் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கப்பெறும். சொந்தபந்தங்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம்.
சிம்மம்
உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
கன்னி
இன்று அலைச்சல் சற்று அதிகமாகக் காணப்படும். பிரயாணங்களை திட்டமிட்டு இனி வரும் நாட்களில் மேற்கொள்ளுங்கள். எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு இரு முறை சென்று முடிக்க வேண்டி வரலாம். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு, அசதி தென்பட இடம் உண்டு. சிலருக்கு அவ்வப்போது சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போகலாம். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக திடீர் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும், இறுதியில் சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்.
துலாம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் போராட வேண்டி இருக்கும். மாணவர்கள் தேவை இல்லாத சகவாசங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். அரசியல் வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். மேலிடத்தால் சிலருக்குப் புதிய பொறுப்புகள் தரப்படலாம். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுதல் நலம். தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் தொடர்பாக சின்னச், சின்ன மனக்கவலைகள் சிலருக்கு வந்து போகலாம்.
விருச்சிகம்
இன்று பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் கூட பொருளாதாரம் உங்களுக்குச் சாதகமாகத் தான் இருக்கும். வேலையாட்களை மட்டும் நீங்கள் அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். அரசு உதவிகள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வங்கிக் கடனை சிலர் போராடி அடைப்பீர்கள். அரசியல் வாதிகள் பேச்சில் அதிக நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய தருணம் இது. உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது இப்போதைக்கு நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற – இறக்கமான நிலை காணப்படலாம். சில தடைகளை தாண்டியே முன்னேற வேண்டிய நாள். எனினும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
இன்று வரவுக்கு மீறிய வீண் செலவுகள் சிலரை ஆதங்கப்படுத்தலாம். எனினும், கவலை வேண்டாம் ஏற்ற நேரத்தில் சேமிப்பு உயரும். உத்யோகத்தில் இருக்கும் பெண்கள் குடும்ப விஷயங்களை அந்நிய நபர்களிடத்தில் பகிர வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் வீண் சண்டைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் மற்றும் நேர்முக – மறைமுக எதிர்ப்புகளுக்கு இடையே முடிந்த வரையில் லாபம் ஈட்டுவீர்கள். வர வேண்டிய வாய்ப்புகள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் வந்து சேரும்.
மகரம்
இன்று அலைச்சல் அதிகமாக இருக்கும். கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் வந்து போக இடம் உண்டு. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் – உறவினர்களை அனுசரித்துச் சென்றால் நல்ல பலன்களை ஓரளவு காணலாம். மற்றபடி முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். சிலர் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்
இன்று அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் சிலருக்கு உண்டாக இடம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருக்கும் போட்டி, பொறாமைகளை எல்லாம் சமாளித்து நீங்கள் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு முன்பு இருந்த தேக்க நிலை மற்றும் பணியில் இருந்த முரண்பாடுகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகையை பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் உடல் நலக் குறைவு ஏற்பாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தீய நண்பர்கள் சகவாசத்தை தவிர்க்கப் பாருங்கள்.
மீனம்
இன்று பொருளாதார ரீதியாக சில நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகம் காணப்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலுமே கூட சமயோசிதமாக யோசித்து நன்மையை பெறுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களால் சின்னச் சின்ன இடையூறுகள் ஏற்பட இடம் உண்டு. குல தெய்வ வழிபாடு ஆறுதல் தரும்.