Advertisement
ஆன்மீகம்ஜோதிடம்

இன்றைய ராசிபலன் – (20-09-2024)

இன்றைய நாள் (20-09-2024) :

குரோதி-புரட்டாசி 4-வெள்ளி-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 1:15

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று காலை 09.38 வரை ரேவதி பின்பு அஸ்வினி

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பூரம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

சிம்மம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.

மிதுனம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

கடகம்

உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்க இடம் உண்டு. எனினும், மேலதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உங்களது உழைப்பு இறுதியில் வீண் போகாது. சிலருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கப்பெறும். அதன் மூலமாக எதிர்காலத்தில் நன்மைகள் உண்டு. உடல் நிலையில் மட்டும் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். எப்போதுமே பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்

இன்று நீங்கள் நல்லதாகவே நல்ல நோக்கத்தில் கருத்துக்களை சொன்னாலுமே பிறர் அதனை தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். நியாயப் படி கிடைக்க வேண்டிய பண வரவுகள் சரியான நேரத்தில் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். கணவன்-மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்து முன்னேறப் பாருங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய எதிர்ப்புகளைக் கடந்தே முன்னேறுபடியாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறைக்குப் பல முறை நன்கு யோசித்து செயல்படுங்கள். உத்யோகத்தில் வேலை பளு தவிர்க்க முடியாது.

கன்னி

இன்று பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

விருச்சிகம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

தனுசு

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.

மகரம்

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

கும்பம்

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகப் பணி தொடர்பாக சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை தியானித்து வழிபடுவதன் மூலம் வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

மீனம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!