Advertisement
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (20-08-2024): இந்த ராசியினருக்கு திடீர்யோகம் கிட்டும்!

இன்றைய நாள் (20-08-2024) :

குரோதி-ஆவணி 4-செவ்வாய்-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 7:45 – 8:45

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45

மாலை 7:30 – 8:30

நட்சத்திரம்

இன்று காலை 07.50 வரை அவிட்டம் பின்பு சதயம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

திருவாதிரை

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

மிதுனம்

இன்றைய ராசிபலன்கள்:-

மேஷம்

இன்று பூர்வீக சொத்து விஷயங்களில் சில நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சந்தித்து தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்படலாம். எனினும் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு இறுதியில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். முடிந்தவரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை மட்டும் தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்று உங்கள் மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு இளைய சகோதர வகையில் கூட நன்மைகள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்குப் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். வீட்டில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் மகிழ்ச்சி தரும். இதனால் திருமணம் ஆகாத அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். திருமணம் ஆகி குழந்தை இல்லாத அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக்கூடிய யோகம் கிடைக்கப்பெறும். நன்மைகள் மேலோங்கும் நல்ல நாள்.

மிதுனம்

இன்று அலைச்சல் அதிகம் காணப்படும். சிலர் உத்யோக ரீதியாகப் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். அப்படியாகப் பிரயாணங்களை மேற்கொள்ளும் சமயத்தில் அதனை நன்கு திட்டமிட்டுச் செய்தால் அலைச்சலைத் தவிர்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகம் இருந்தாலும், மேலதிகாரி உங்கள் உழைப்பை அங்கீகரிப்பார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு கூட ஒரு முடிவுக்கு வரும்.தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் காணப்பட்டாலும் கூட, இறுதியில் எதிர்பார்க்கும் லாபத்தைப் போராடிப் பெற்று விடுவீர்கள். மற்றபடி, வியாபாரம் வழக்கம் போலத்தான் இருக்கும். எனினும் தொழில் கூட்டாளிகளை அதிகம் சிலர் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். முடிந்த வரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். புதிய கிளைகளைத் துவங்கும் சமயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும். அரசு விஷயங்களில் சிலருக்குச் சின்னச், சின்ன கெடுபிடிகள் வந்து போகலாம்.

கடகம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்‌.

கன்னி

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர்யோகம் கிட்டும் நாள்.

துலாம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதியசரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மகரம்

உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், வீண் அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!