
இன்றைய நாள் (19-10-2024) :
குரோதி-ஐப்பசி 2-சனி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 9:30 – 10:30
நட்சத்திரம்
இன்று பிற்பகல் 02.35 வரை பரணி பின்பு கிருத்திகை
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
உத்திரம், ஹஸ்தம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
கன்னி
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
இன்றைய தினம், அரசு வகையில் உதவிகள் சீக்கிரம் கிடைக்க இறைவனை அதிகம் வேண்டிக் கொள்ளுங்கள். யாருக்கும் ஸுரிட்டி, ஜாமீன் போடாதீர்கள். கணவன் – மனைவி இடையே மட்டும் அந்நிய நபர்கள் தலையீடு இன்றி நீங்களே பொறுமையாகப் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மாணவ மாணவியர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் ஏற்பட இடம் உண்டு. முக்கியமாக கண் சம்மந்தமான பிரச்சனைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்துக் காணப்படலாம். அதனால் முடிந்த வரையில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துக் காணப்படலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் தேவை இல்லாத நஷ்டங்களை தவிர்க்கலாம். உத்யோகத்தில் அலைச்சல் மற்றும் வேலை பளு அதிகரித்துக் காணப்படும்.
ரிஷபம்
முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.
மிதுனம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும்.
கடகம்
மகிழ்ச்சியான நாள். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும்.
சிம்மம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும்.
கன்னி
தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்டநாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.
விருச்சிகம்
இன்று சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அல்லது துறை மாற்றங்கள் அலைச்சலைத் தரலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்களே நேரடியாகச் செய்யுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லப்பாருங்கள். வேலை பளு அதிகம் இருக்கிறதே என்று வேலையை விட்டு விடாதீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கூட இப்போதைக்கு கிடைக்கும் வேலையை செய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகளுக்கு இடையே லாபம் பார்க்க வேண்டிய நிலை காணப்படும். அதே சமயத்தில், சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து உதவிகளும் கிடைக்கப்பெறும். மற்றபடி செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் இறுதியில் சமாளித்து விடுவீர்கள்.
தனுசு
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் போராட வேண்டி இருக்கும். மாணவர்கள் தேவை இல்லாத சகவாசங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். அரசியல் வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். மேலிடத்தால் சிலருக்குப் புதிய பொறுப்புகள் தரப்படலாம். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுதல் நலம். தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் தொடர்பாக சின்னச், சின்ன மனக்கவலைகள் சிலருக்கு வந்து போகலாம்.
மகரம்
இன்று பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் கூட பொருளாதாரம் உங்களுக்குச் சாதகமாகத் தான் இருக்கும். வேலையாட்களை மட்டும் நீங்கள் அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். அரசு உதவிகள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வங்கிக் கடனை சிலர் போராடி அடைப்பீர்கள். அரசியல் வாதிகள் பேச்சில் அதிக நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய தருணம் இது. உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது இப்போதைக்கு நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற – இறக்கமான நிலை காணப்படலாம். சில தடைகளை தாண்டியே முன்னேற வேண்டிய நாள். எனினும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்
இன்று வரவுக்கு மீறிய வீண் செலவுகள் சிலரை ஆதங்கப்படுத்தலாம். எனினும், கவலை வேண்டாம் ஏற்ற நேரத்தில் சேமிப்பு உயரும். உத்யோகத்தில் இருக்கும் பெண்கள் குடும்ப விஷயங்களை அந்நிய நபர்களிடத்தில் பகிர வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் வீண் சண்டைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் மற்றும் நேர்முக – மறைமுக எதிர்ப்புகளுக்கு இடையே முடிந்த வரையில் லாபம் ஈட்டுவீர்கள். வர வேண்டிய வாய்ப்புகள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் வந்து சேரும்.
மீனம்
இன்று அலைச்சல் அதிகமாக இருக்கும். கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் வந்து போக இடம் உண்டு. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் – உறவினர்களை அனுசரித்துச் சென்றால் நல்ல பலன்களை ஓரளவு காணலாம். மற்றபடி முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். சிலர் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.