இன்றைய ராசிபலன் (19-07-2024): இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு..!
இன்றைய நாள் (19-07-2024) :
குரோதி-ஆடி 3-வெள்ளி-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 9:00 – 10:00
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:15 – 1:15
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று அதிகாலை 02.54 வரை கேட்டை பின்பு மூலம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
பரணி
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மேஷம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று சிலருக்கு பிள்ளைகள் வழியில் சில மனக் கவலைகள் வந்து போக இடம் உண்டு. பல நேர்முக – மறைமுக எதிர்ப்புகளைக் கடந்து தான் முன்னேற வேண்டி இருக்கும். மற்றபடி, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும் கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். முடிந்த வரையில் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலுமே கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட இடம் இல்லை. விநாயக வழிபாடு சங்கடம் போக்கும்.
மிதுனம்
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடிப்பதுடன் சக ஊழியர்கள் தொடர்பு கொண்டு கேட்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகரை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.
சிம்மம்
காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.
துலாம்
இன்று காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
விருச்சிகம்
இன்று எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தனுசு
இன்று சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலைத் தரலாம். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் சின்னச், சின்ன முரண்பாடுகள் ஏற்படலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் போராடியே ஓரளவு லாபத்தைப் பெறும் படியாக இருக்கும். உறவினர்களால் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடை பெறக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகம் செல்பவர்களுக்கு பணிகளில் சற்று உற்சாகம் குறையக்கூடும். அதன் காரணமாக அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். புதிய முதலீடுகள் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை நன்றாக யோசித்துச் செயல்படவும்.
மகரம்
புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், இறுதியில் அதுவும் கூட சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும்.
கும்பம்
இன்று தந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
இன்று சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.