இன்றைய நாள் (18-07-2024) :
குரோதி-ஆடி 2-வியாழன்-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:15 – 1:15
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று அதிகாலை 02.14 வரை அனுஷம் பின்பு கேட்டை
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
அசுபதி
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மேஷம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
இன்று செலவுகள் சற்று அதிகரித்துத் தான் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது பலருக்கு சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போக இடம் உண்டு. வெளி இடங்களில் சாப்பிடும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து அவ்வப்போது கிடைக்கும் உதவிகள் உங்களுக்கு ஆறுதல் தரும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலைத் தந்தாலும் கூட, இறுதியில் எல்லாம் சாதகமாக நடந்தேறும். வழக்குகள் சிலருக்கு இறுதியில் சாதகம் ஆகும். அதே சமயத்தில், எதையும் ஒருமுறைக்கு, இரு முறை அலைந்து திரிந்து தான் முடிக்க வேண்டி இருக்கும். முடிந்தவரையில் நிதானமாகச் செயல்படுங்கள். உத்யோகத்தில் உடன் இருப்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட இடமுண்டு.
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
மிதுனம்
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணுவை தியானிப்பதன் மூலம் இடையூறுகள் விலகும்.
கடகம்
மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் குறையும்.
சிம்மம்
தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு அலுவலகம் தொடர்பான மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூற வாய்ப்பு உள்ளது. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.
துலாம்
சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அனாவசியமாக அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்களும் உண்டு. விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
இன்று உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகரித்துக் காணப்படலாம். உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு அஜீரணம் சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். கணவன்-மனைவி இடையே, தேவை இல்லாத விவாதங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். குடும்பத்தில் சிக்கனமாக இருந்தும் கூட எதிர்பாராத செலவுகள் வருகிறதே என்று நீங்கள் வருந்த இடம் உண்டு. கொடுக்கல் – வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நம்பியவர்களே பணம் தராமல் இழுத்தடிக்கலாம். இதனால் மனம் கவலை கொள்ளலாம். இறைவனை மட்டும் நம்புங்கள். குல தெய்வ வழிபாடு இறுதியில் சோதனைகளை சாதனையாக மாற்றும்.
தனுசு
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.
மகரம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கும்பம்
உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.
மீனம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சேர்ந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.