இன்றைய நாள் (16-09-2024) :
குரோதி-ஆவணி 31-திங்கள்-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 6:15 – 7:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மாலை 7:30 – 8:30
நட்சத்திரம்
இன்று மாலை 03.52 வரை அவிட்டம் பின்பு சதயம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
திருவாதிரை, புனர்பூசம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மிதுனம் / கடகம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமூகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும்.
ரிஷபம்
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அம்பிகையை தியானித்து வழிபட செயல்கள் அனைத்துமே சாதகமாக முடியும்.
மிதுனம்
இன்று சிறு, சிறு நெருக்கடிகளுக்கு இடையே எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கப்பெறும். கணவன் – மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உறவினர்களை கூட அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். பண விஷயத்தில் ஏற்ற – இறக்கமான சூழ்நிலை காணப்படும். அதனால் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை குறைக்கப்பாருங்கள். ஆன்மீகம் மற்றும் தெய்வ காரியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சிலர் செலவு செய்யக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கூட அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். இயந்திரம், ஆயுதம், மின்சாரம் இவற்றுடன் பழகும் சமயத்தில் கவனம் தேவை.
கடகம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
சிம்மம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.
கன்னி
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரையை தருவார்கள். சாதிக்கும் நாள்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனகசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
தனுசு
தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று துர்க்கையை வழிபட காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியும்.
மகரம்
இன்றைய தினம் கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை முதலீடு செய்யும் சமயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும். சில தரகர்களின் பேச்சை ஆராய்ந்து அறிந்து சரி பார்த்து பின்னர் செயல்படுத்தவும். பங்குச் சந்தையில் கூட பெரிய முதலீடுகளை நன்கு யோசித்து திட்டமிட்டுச் செய்யவும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தரப்படலாம். இதனால் வேலை பளு அதிகரிக்க இடமுண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களின் கைகள் ஓங்கும் நாள்.
கும்பம்
இன்று எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.