இன்றைய நாள் (09-09-2024) :
குரோதி-ஆவணி 24-திங்கள்-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 6:15 – 7:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மாலை 7:30 – 8:30
நட்சத்திரம்
இன்று மாலை 03.49 வரை விசாகம் பின்பு அனுஷம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
உத்திரட்டாதி, ரேவதி
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மீனம்
இன்றைய ராசிபலன்கள்:-
மேஷம்
சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
மிதுனம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மகிழ்ச்சியான நாள்.
கடகம்
பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
சிம்மம்
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
கன்னி
புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் நடைபெறும். இன்று சிவபெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாக முடியும்.
துலாம்
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.
தனுசு
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
மகரம்
இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கும்பம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
மீனம்
உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.