Friday, January 24, 2025

இன்றைய ராசிபலன் – (08-10-2024)

- Advertisement -

இன்றைய நாள் (08-10-2024) :

குரோதி-புரட்டாசி 22-செவ்வாய்-வளர்பிறை

- Advertisement -

நல்ல நேரம்

காலை 8:00 – 9:00

மாலை 4:45 – 5:45

- Advertisement -

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45

- Advertisement -

மாலை 7:30 – 8:30

நட்சத்திரம்

இன்று அதிகாலை 12.34 வரை அனுஷம் பின்பு கேட்டை

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

அசுபதி, பரணி

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

மேஷம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று சிலருக்கு பிள்ளைகள் வழியில் சில மனக் கவலைகள் வந்து போக இடம் உண்டு. பல நேர்முக – மறைமுக எதிர்ப்புகளைக் கடந்து தான் முன்னேற வேண்டி இருக்கும். மற்றபடி, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும் கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். முடிந்த வரையில் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலுமே கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட இடம் இல்லை. விநாயக வழிபாடு சங்கடம் போக்கும்.

ரிஷபம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்‌.

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர்யோகம் கிட்டும் நாள்.

கன்னி

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். முருகப் பெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.

மீனம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!