இன்றைய நாள் (07-08-2024) :
குரோதி-ஆடி 22-புதன்-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று இரவு 09.03 வரை பூரம் பின்பு உத்திரம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
பூராடம், உத்திராடம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
தனுசு / மகரம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.
ரிஷபம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தக்க சமயத்தில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நன்மைகள் நடக்கும் நாள்.
மிதுனம்
அசையும் – அசையா சொத்துக்கள் சம்பந்தமாக வீண் செலவுகள் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. அலைச்சல் அதிகரித்துக் காணப்படும் என்பதால் பயணங்களை நன்கு திட்டமிட்டுச் செய்யுங்கள். எனினும், உங்களது முயற்சிகளுக்கு உரிய நல்ல பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகாது. தொழில் ரீதியாகப் போட்டி, பொறாமைகள் இருந்தாலும் கூட இறுதியில் நீங்கள் அதனை எல்லாம் சமாளித்து வெல்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கடகம்
இன்று உத்யோக ரீதியாக பல காலங்களாக எதிர்பார்த்த சலுகைகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கப்பெறும். மொத்தத்தில் உத்யோக ரீதியாக புதிய பொறுப்புகள் தேடி வரும். அதனால் ஆதாயம் ஏற்படவும் இடம் உண்டு. பெண்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். தாயாரின் தேவைகளை சிலர் பூர்த்தி செய்வீர்கள். பங்காளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு ஒரு முடிவுக்கு வரும்.
சிம்மம்
உடலில் ஒரு வித சோர்வு, உற்சாகக் குறைவு தென்படலாம். அதனால், மனதை நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ளப்பாருங்கள். கணவன் – மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்து தான் செல்ல வேண்டி இருக்கும். அதிக அளவில் அலைச்சல் தென்படும் தான். நெருங்கியவர்களை கூட அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். பேச்சில் கூட அதிக நிதானம் தேவைப்படும் நாள்.
கன்னி
உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
துலாம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.
விருச்சிகம்
கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
தனுசு
செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக்கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.
மகரம்
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
இன்று பொருளாதார ரீதியாக சில நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகம் காணப்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலுமே கூட சமயோசிதமாக யோசித்து நன்மையை பெறுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களால் சின்னச் சின்ன இடையூறுகள் ஏற்பட இடம் உண்டு. குல தெய்வ வழிபாடு ஆறுதல் தரும்.
மீனம்
மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். விநாயகரை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.