இன்றைய நாள் (06-10-2024) :
குரோதி-புரட்டாசி 20-ஞாயிறு-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 3:15 – 4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 1:30 – 2:30
நட்சத்திரம்
இன்று இரவு 11.03 வரை விசாகம் பின்பு அனுஷம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
உத்திரட்டாதி, ரேவதி
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மீனம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மன சஞ்சலம் ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில் முயற்சிகளை ஆலோசிக்கலாம். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
மிதுனம்
செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் செலவுகளிலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாராஹி தேவி வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
சிம்மம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
கன்னி
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
துலாம்
சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
தனுசு
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரிகளுக்குத் தொழிலை விரிவுபடுத்தத் தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
பிற்பகலுக்குமேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நீங்கும். லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.
கும்பம்
குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்
இன்று செலவுகள் சற்று அதிகரித்துத் தான் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது பலருக்கு சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போக இடம் உண்டு. வெளி இடங்களில் சாப்பிடும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து அவ்வப்போது கிடைக்கும் உதவிகள் உங்களுக்கு ஆறுதல் தரும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலைத் தந்தாலும் கூட, இறுதியில் எல்லாம் சாதகமாக நடந்தேறும். வழக்குகள் சிலருக்கு இறுதியில் சாதகம் ஆகும். அதே சமயத்தில், எதையும் ஒருமுறைக்கு, இரு முறை அலைந்து திரிந்து தான் முடிக்க வேண்டி இருக்கும். முடிந்தவரையில் நிதானமாகச் செயல்படுங்கள். உத்யோகத்தில் உடன் இருப்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட இடமுண்டு.