இன்றைய நாள் (04-09-2024) :
குரோதி-ஆவணி 19-புதன்-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
இன்று அதிகாலை 04.13 வரை பூரம் பின்பு உத்திரம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
திருவோணம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
மகரம்
இன்றைய ராசிபலன்கள்:-
மேஷம்
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும்.
ரிஷபம்
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகரை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.
மிதுனம்
காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கடகம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.
சிம்மம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும்.
கன்னி
இன்றைய தினம் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்டநாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.
தனுசு
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.
மகரம்
இதுவரை இருந்த சோர்வுநீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கும்பம்
மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.
மீனம்
எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை தியானிப்பதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.