இன்றைய நாள் (03-08-2024) :
குரோதி-ஆடி 18-சனி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 9:30 – 10:30
நட்சத்திரம்
இன்று பிற்பகல் 01.42 வரை புனர்பூசம் பின்பு பூசம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
விசாகம், அனுஷம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
துலாம் / விருச்சிகம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்
எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
கடகம்
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் உரிய கவனம் தேவை. திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.
சிம்மம்
வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கடுமை காட்ட வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முருகப்பெருமான் வழிபாடு நன்று.
கன்னி
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். போட்டியாளர்களால் தொழிலில் சிறு நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.
துலாம்
மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பழைய சரக்குகளை விற்றுத்தீர்க்க வாய்ப்புகள் உண்டாகும்.
விருச்சிகம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப்போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள்.
தனுசு
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு லேசாக தலை வலிக்கும். கண் சம்மந்தமான பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்
எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மன சஞ்சலம் ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.
கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில் முயற்சிகளை ஆலோசிக்கலாம். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
மீனம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சூடுபிடிக்கும். லாபமும் அதிகரிக்கும். பைரவரை வழிபடுவது நன்று.