Advertisement
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (02-08-2024): இந்த ராசியினருக்கு அதிரடி மாற்றம் உண்டாகும்!

இன்றைய நாள் (02-08-2024) :

குரோதி-ஆடி 17-வெள்ளி-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 1:15

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று பிற்பகல் 12.59 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

ராகு

10.30 AM – 12.00 PM

குளிகை

7.30 AM – 9.00 AM

எமகண்டம்

3.00 PM – 4.30 PM

திதி

இன்று மாலை 04.48 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

சுவாதி, விசாகம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

துலாம்

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்

எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகன பழுதை சரிசெய்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

இன்றைய தினம் செலவுகள் அதிகரித்துக் காணப்படும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். அலைச்சல் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது. மனதில் அவ்வப்போது நிலைமையை சமாளித்து விடலாம் என்கிற தைரியம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும். அலைச்சலை தவிர்க்க முடியாது தான். எனினும், உங்களது முயற்சி வீண் போகாது. தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் இருக்கும் தான். வேலை ஆட்கள் ஒத்துழைக்க மறுப்பது சிலருக்கு கவலை அளிக்கும் தான். எனினும் இறுதியில் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை நீங்கள் பெற்று விடுவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை போராடிக் காப்பீர்கள். செலவுகள் மட்டும் அதிகரித்துக் காணப்படும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். சிலருக்குப் புதிய கடன்கள் ஏற்பட இடம் உண்டு. முடிந்த வரையில் சிக்கனத்தை கடைபிடியுங்கள்.

கடகம்

இன்று சிலருக்குப் பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. பணியில் வேலை பளு அதிகம் இருந்தாலும் கூட சக ஊழியர்கள் கொஞ்சம் ஒத்துழைப்பார்கள். இதனால் ஆறுதல் அடைவீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கூட ஏற்படும். எனினும், எப்படிப் பார்த்தாலும் உத்யோகம் அல்லது பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்றே தாமதம் ஆக இடம் உண்டு. மாணவர்கள் நண்பர்களை பார்த்துத் தேர்ந்து எடுங்கள். சில சோதனைகளைக் கடந்து முன்னேற வேண்டிய நாள்.

சிம்மம்

இன்று கொடுத்துக் கிடைக்காத பணம் சிலருக்கு வசூல் ஆகும். சிலர் பழைய கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். பணம் கையிருப்பு சிலருக்கு கணிசமாக உயரும். இன்னும் சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் கூட கிடைக்கப்பெறும். சிலருக்கு விரும்பிய இடத்தில் இடம் மாறுதல் கூட ஏற்படும். சிலர் வேறு ஒரு நல்ல வேலைக்கு மாறுவார்கள். சிலருக்கு உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கூட கிடைக்கப்பெறும். தொழில் ரீதியாக இருந்து வந்த கடன் சுமைகள் சிலருக்குக் குறையும் அல்லது நீங்கும். மொத்தத்தில் நன்மைகள் நடந்தேறும் நல்ல நாள்.

கன்னி

இன்று மாணவ – மாணவியர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில், புதிய வாடிக்கையாளர்களைக் கவர சிலர் சலுகைகளை அறிவிக்க வேண்டி வரலாம். இதனால் லாபம் சற்று குறைய இடம் உண்டு. கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் எப்போதுமே கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில், யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். அரசியல்வாதிகள் பேச்சில் அதிக நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய நாள். விவசாயிகள் தங்கள் உழைப்பால் உயருவீர்கள். பெண்களைப் பொறுத்தவரையில் குடும்பச் செலவுகள் சற்று அதிகரித்துத் தான் காணப்படும். எனினும் நீங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள். வேலை அல்லது உத்யோகம் வழக்கம் போலவே இருக்கும்.

துலாம்

இன்று சகல விதங்களிலும் அனுகூலமான பலன்கள் தான் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காணுவீர்கள். தேவைகள் நல்ல படியாக பூர்த்தி ஆகும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் கூட நல்ல படியாகக் கைகூடும். வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பாக்கியம் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரம் கூட சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் நன்மைகள் நடைபெறும் ஒரு நல்ல நாள்.

விருச்சிகம்

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

கும்பம்

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும்.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியைபைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!