இன்றைய ராசிபலன் (02-07-2024)
இன்றைய நாள் (02-07-2024) :
குரோதி-ஆனி 18-செவ்வாய்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 7:30 – 8:30
நட்சத்திரம்
இன்று காலை 06.33 வரை பரணி பின்பு கிருத்திகை
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
உத்திரம்
சந்திராஷ்டமம் (ராசிப்படி)
சிம்மம் / கன்னி
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.
ரிஷபம்
ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கடுமை காட்ட வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முருகப்பெருமான் வழிபாடு நன்று.
கடகம்
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். போட்டியாளர்களால் தொழிலில் சிறு நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.
சிம்மம்
மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பழைய சரக்குகளை விற்றுத்தீர்க்க வாய்ப்புகள் உண்டாகும்.
கன்னி
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப்போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள்.
துலாம்
மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபட்டு தொடங்குவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
தனுசு
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம்
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
கும்பம்
சமயோசிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
மீனம்
எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
Posted in: ஜோதிடம்