27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம்
1. அசுவினி – பூ முடித்தல், விவாகம், அன்னப்பிராசனம், பெயர் சூட்டுதல், உபநயனம், குதிரை வாங்குதல், வேதசாஸ்த்திர அப்பியாசம், பட்டாபிஷேகம் அல்லது பதவி ஏற்பு, விதை விதைத்தல், தென்னை, பலா, மா முதலிய விருக்ஷங்கள் வைத்தல், யாத்திரை செய்தல், கிரகப்பிரவேசம், தானியம் வாங்க, மாடு – கன்றுகள் வாங்க உகந்த நக்ஷத்திரம் இதுவே. இந்த நக்ஷத்திரம் வரும் நாளில் மேற்கண்டவற்றை செய்யலாம்.
2. பரணி – தீர்த்த யாத்திரைக்கு செல்லுதல், வீட்டில் அடுப்பு போடுதல், கத்திரிக்காய் விதை விதைக்க, முட்ச்செடிகள் நடல் ஆகிய இவை அனைத்திற்கும் இந்த நக்ஷத்திரம் உகந்தது.
3. கிருத்திகை – ஹோமம் செய்ய, சமையல் செய்ய, தேவை இல்லாத மரங்களை வெட்ட, சூளைக்கு தீயிட, வாகனங்களை விற்க இந்த நக்ஷத்திரம் வரும் நாளை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
4. ரோகிணி – ருதுசாந்தி, பூ முடித்தல், சீமந்தம், உபநயனம், வித்தியாப்பியாசம், கிரகப் பிரவேசம், கும்பாபிஷேகம், யாகம், நவக்கிரக சாந்தி, வியாபாரம் முதலியவற்றை செய்யவும். கிணறு வெட்ட, வாசக்கால் நாட்ட, புத்தகங்கள் வாங்க, கடன் வாங்க, கடன் தீர்க்க இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
5. மிருகசீரிஷம் – விவாகம் செய்ய, ருதுசாந்தி செய்ய, பூ முடித்தல், சீமந்தம் செய்ய, பெயர் சூட்ட, காது குத்த, அன்னப்பிராசனம் செய்ய, உபநயனம் செய்ய, வித்தியாரம்பம் செய்ய, ஆபரணம் வாங்கி அணிய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
6. திருவாதிரை – சூளைக்கு நெருப்பு இட, சிவபூஜை செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
7. புனர்பூசம் – பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்ட, முடிவாங்க, காதுகுத்த, வாஸ்து சாந்தி செய்ய, கிரகப்பிரவேசம் செய்ய, யாத்திரை செய்ய, வியாபாரம் புது வஸ்திரம் வாங்க, விவாகம், கும்பாபிஷேகம் செய்ய, கப்பல் பிரயாணம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
8. பூசம் – ருதுசாந்தி, பூ முடித்தல், சீமந்தம் செய்ய, பெயர் சூட்ட, பசு வாங்க, விவசாயம் செய்ய, யாத்திரை செய்ய, வாஸ்து சாந்தி செய்ய, கரும்பு நட, விவாகம் நடத்த, குடிபோக, இரத்தின நகைகள் சிரசில் அணிய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
9. ஆயில்யம் – ஒரு ஜெபத்தை பூர்த்தி செய்ய, நவக்கிரக சாந்தி செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
10. மகம் – விவாகம் செய்ய, மந்திரப்பிரயோகம் செய்ய, விதை விதைக்க, கதிரறுக்க, சந்நியாசி மற்றும் தவசிகளை தரிசனம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
11. பூரம் – அம்பாள் தரிசனம் செய்ய, சித்திரம் எழுத, மாடு வாங்க, சூளை பிரிக்க இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
12. உத்திரம் – பூ முடித்தல், சீமந்தம் செய்ய, அன்னப்பிராசனம் செய்ய, உபநயனம் செய்ய, விவாகம் செய்ய, காதுகுத்த, பள்ளிக்கூடத்தில் சேர, ஆபரணம் அணிய, கிரகப்பிரவேசம் செய்ய, விதை விதைக்க, வெளிநாட்டுப் பிரயாணம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
13. அஸ்தம் – ருதுசாந்தி செய்ய, பூ முடிக்க, சீமந்தம் செய்ய, விருந்து உண்ண, உபநயனம் செய்ய, விவாகம் செய்ய, விதை விதைக்க, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, கிரகப்பிரவேசம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
14. சித்திரை – பூ முடிக்க, சீமந்தம் செய்ய, உபநயனம் செய்ய, விவாகம் செய்ய, குதிரை வாங்க, கிரகப் பிரவேசம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
15. சுவாதி – பூ முடிக்க, பெயர் சூட்டல், அன்னப்பிராசனம் செய்ய, ஜோதிடம், வைத்தியம் ஆரம்பிக்க, புத்தகங்கள் பத்திரிக்கைகள் பிரசுரஞ்செய்ய, நவக்கிரக ஜெபம் செய்ய, விவாகம் செய்ய இந்த நக்ஷத்திர நாள் உகந்தது.
16. விசாகம் – விவசாய தானியங்களை அறுக்க, கிணறு தடாகங்களை சீர் திருத்தம் செய்ய இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
17. அனுஷம் – ருது சாந்தி செய்ய, பூ முடிக்க, காதுகுத்த, உபநயனம் செய்ய, ஆபரணம் வாங்கி அணிய, கிரகப்பிரவேசம் செய்ய, வாசக்கால் வைக்க, கடவுள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய, கதிர் அறுக்க, அரசாங்க கடன் வாங்க, விவாகம் செய்ய இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
18. கேட்டை – மந்திரங்களை கற்க, கடனை அடைக்க, வாஸ்து சாந்தி செய்ய, கிணறு வெட்ட இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
19. மூலம் – ருதுசாந்தி செய்ய, பூ முடிக்க, சீமந்தம் செய்ய, விருந்து உண்ண, ஆபரணம் தரிக்க, விவாகம் செய்ய, பெயர் சூட்ட, உபநயனம் செய்ய, விதை விதைக்க, கடன் தீர்க்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
20. பூராடம் – விவாசாயிகள் கரும்பு நட, பழைய கிணறுகளை சீர்திருத்த, புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு செல்ல இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
21. உத்திராடம் – பூ முடிக்க, சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய, விவாகம் செய்ய, கிரகப் பிரவேசம் செய்ய, கிணறு வெட்ட, தூரதேச யாத்திரைக்கு செல்ல இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
22. திருவோணம் – ருதுசாந்தி செய்ய, பூ முடிக்க, பெயர் சூட்ட, உபநயனம் செய்ய, ஹோமசாந்தி செய்ய, விதை விதைக்க, விவாகம் செய்ய, கடன் தீர்க்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
23. அவிட்டம் – பூ முடிக்க, பெயர் சூட்ட, திருமாங்கல்யம் செய்ய, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க, மருத்துவரை பார்க்க, உணவுப் பொருள்கள் மற்றும் தானியங்களை வாங்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
24. சதயம் – பூ முடிக்க, குழந்தைகளுக்கு பெயர் சூட்ட, உபநயனம் செய்ய,வியாபார கணக்கு முடிக்க, யாத்திரையை மேற்கொள்ள, மாடு வாங்க, விதை விதைக்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
25. பூரட்டாதி – கவலையை மறக்க, மந்திரம் ஜெபிக்க, சாந்தி செய்ய, செங்கல் சூளை பிரிக்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
26. உத்திரட்டாதி – ருதுசாந்தி, பூ முடித்தல் , சீமந்தம், பெயர் சூட்டல், காது குத்த, யாத்திரை போக இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
27. ரேவதி – ருதுசாந்தி செய்ய, காது குத்த, உபநயனம் செய்ய, விவாகம் செய்ய, விதை விதைக்க, குளம், கிணறு வெட்ட, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க இந்த நக்ஷத்திரம் வரும் நாள் உகந்தது.
Posted in: ஜோதிடம்