ஆடி மாதத்தில் வரும் சிறப்பு நாட்களில் ஒன்று ஆடி பௌர்ணமி ஆகும். பௌர்ணமி என்றாலே, சிவன் வழிபாட்டிற்கும், திருமால் வழிபாட்டிற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் உகந்த நாள் ஆகும்.
ஆடி பௌர்ணமி வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை வந்து சேரும்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த ஆடி பௌர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள்.
இந்த அற்புத நாளில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். புண்ணியம் கிட்டும். உயர் பதவிகளை அடையலாம்.