ஆன்மீகம்

குலதெய்வம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சொல்ல வேண்டிய மந்திரம்..!

குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த ஆண் அல்லது பெண்ணை கடவுளாக பூஜித்து வணங்கப்படும் தெய்வமாகும்.
ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு.

இந்த குலதெய்வங்கள் எங்கோ ஒரு கிராம கோவிலில் மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை.
நமது வீட்டிலும் குலதெய்வத்தை குடிகொள்ள செய்ய முடியும். அதற்கு நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை
வகுத்துள்ளனர். அவற்றை பின்பற்றுவதால் நமது வீட்டில் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்ய தொடங்கி நமக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.

குல தெய்வம் வீட்டில் தங்க வழிமுறை ஒரு கலச சொம்பு பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து அதில் கொஞ்சம் பன்னீர் ஊற்றவேண்டும். பன்னீர் எந்த அளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு சுத்தமான நீரை ஊற்றி வைக்க வேண்டும். பின்பு
அந்த சொம்பு பாத்திரத்தை நூல் கொண்டு சுற்ற வேண்டும். நூல் சுற்ற தெரியாதவர்கள், கடைகளில்
கலச சொம்பிற்கு கட்டும் சிறியளவு பட்டு துணியை வாங்கி, அத்துணியை சொம்பின் மீது சுற்றிவிடவும்.

பின்பு உங்கள் பூஜையறையில் ஒரு மரப்பலகை அல்லது பீடத்தை வைத்து, அதில் தலைவாழை
இலையை போட்டு, அதில் பச்சரிசி ஒரு ஆழாக்கு அளவு பரப்பி, அதில் இந்த கலச சொம்பை
வைக்க வேண்டும். இந்த சொம்பிற்குள் வெற்றிலைகள் அல்லது மாவிலைகளை செங்குத்தாக
வைத்து, அதற்கு நடுவில் ஒரு வாழைப்பூவை நுனி பகுதி மேல்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

மந்திரம்: ஓம் பவாய நம | ஓம் சர்வாய நம | ஓம் ருத்ராய நம | ஓம் பசுபதே நம | ஓம் உக்ராய நம |
ஓம் மஹாதேவாய நம | ஓம் பீமாய நம | ஓம் ஈசாய நம

என்கிற மேலே உள்ள மந்திரத்தை 108 முறை துதித்தவாறு வில்வ இலைகள், ஊமத்தம் பூக்கள் கொண்டு கலசத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

இப்பூஜையை மூன்று நாட்களுக்கு மட்டும் செய்தால் போதும். பூஜை முடிந்த பிறகு கலசம் வைக்கப்பட்ட பச்சரிசியை சமைத்து சாப்பிடலாம். பூஜைக்கு வைக்கப்பட்ட வாழைப்பூவையும் பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது. கலசத்தில் உள்ள நீரை நமது வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அந்நீர் மீதம் இருந்தால் நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். மேற்க்கண்ட முறையில் பூஜை செய்பவர்களின் இல்லத்தில் அவர்களின் குலதெய்வம் நிரந்தரமாக வாசம் செய்து நமக்கு நல்லருள் புரியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!