தமிழ்நாடுமாவட்டம்

பாஸ்போர்ட்டில் போலி முத்திரை.. திருச்சியில் வாலிபர் கைது..!

புதுக்கோட்டை மாவட்டம் கற்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (27 )இவர் மலேசியாவில் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு டூரிஸ்ட் விசா மூலம் மலேசியா சென்ற பிரசாத் அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து மலேசியா சென்றது போன்ற தனது பாஸ்போர்ட்டில் போலியான இமிகிரேஷன் பிரிவு முத்திரை பதித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மலேசியாவிலிருந்து திருச்சிக்கு பிரசாத் வந்தபோது இமிகரேஷன் பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது ஒரு போலியான முத்திரை வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இவரை ஏர்போர்ட் இமிகிரேஷன் பிரிவு அதிகாரி பவன் மணி அளித்த புகாரின் அடிப்படையில் பிரசாத்மீது வழக்குப்பதிவு செய்து ஏர்போர்ட் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:  ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தந்தை, மகன்.. மின்னல் தாக்கி பரிதாபமாக பலி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: