ஆரோக்கியம்தமிழ்நாடு

30 வயது ஆகிவிட்டதா? இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!

நாம் ஒவ்வொரு வயதினை கடக்கும்போதும் செல்களின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படும். செல்களின் வளர்ச்சி 30 வயதிற்கு பின்னர் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். கல்லீரல் செயல்பாடு குறையும். எலும்புகளில் கால்சியம் சேர்க்கையானது குறையும். அஜீரண கோளாறு, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

கடைபிடிக்க வேண்டிய உணவு முறை என்ன?

அதிகப்படியாக காபி குடிக்கும் போது எலும்புகள் மேலும் பலவீனமாகி செல்களின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும்.

வாழைப்பழத்தில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால் இதய நோய் ஏற்படும் பிரச்சனை குறைகிறது.

அதிகளவு கீரையினை சாப்பிட வேண்டும். கீரையில் உள்ள கால்சியம் மற்றும் போலிக் அமிலம் எலும்புகளுக்கு மிக அவசியமாகும்.

அதிகமாக மோர், யோகார்ட், பால் ஆகிய்வற்றை சாப்பிட தொடங்குங்கள். இவை உடலை கால்சியம் தருவதோடு உடல் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களையும் தடுக்கும்.

இந்த வயதில் உணவுகளை தவிர்த்தால் உங்கள் வளர்சிதை மாற்றம் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பின்னாளில் அஜீரணம், அசிடிட்டி என பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு.

அதிகமாக தேங்காய், அவகாடோ மற்றும் நல்லெண்ணெய் உபயோகப்படுத்துவதால் மூட்டு தேய்மானம், மூட்டு வலி ஆகியவை வராமல் தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: