தமிழ்நாடு

இனி மின்கட்டணத்திலும் சேமிக்கலாம்! முன்கூட்டியே மின்கட்டணம் கட்டினால் வட்டி வழங்கப்படும்..!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் (Electricity bill) இரு மாதத்திற்கு ஒரு முறை கண்க்கிடப்பட்டு, மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. பொதுவாகவே, மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கு, கண்க்கீடு எடுக்கப்பட்ட நாளிலிருந்து 20 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். பெரும்பாலான மக்கள் அவகாச காலத்திற்குள்ளேயே கட்டணம் கட்டி விடுவார்கள். ஆனால், சிலர் அவகாச காலத்திற்குள் கட்டாமல், பெனால்டி போட்டு கட்டுவதும் உண்டு. இதற்கெல்லாம் தீர்வாக முன்கூட்டியே மின் கட்டணம் கட்டும் புதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

முன்கூட்டியே மின் கட்டணம்

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் (Electricity bill) செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு (Electricity board) மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்; இல்லையேல், மின் வினியோகம் (Power supply) துண்டிக்கப்படும். இதைத் தவிர்க்க வெளியூர் செல்வோர், வெளியூரில் வசிப்போர், தங்களுக்கான மின் கட்டணத்தை, உத்தேச அடிப்படையில், முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும் கட்டணத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும், ஆண்டு வட்டியை, மின் வாரியம் வழங்குகிறது.

2.70 சதவீதம் வட்டி:

வரும் நிதியாண்டில் முன்கூட்டியே மின் கட்டணம் கட்டினால் 2.70 சதவீதம் வட்டி (2.7 % interest) வழங்க, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, அடுத்த மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டிற்கு, 3.25 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், பொதுமக்கள் முன்னதாகவே ஆர்வமுடன் மின் கட்டணம் கட்டுவார்கள்.

Back to top button
error: Content is protected !!