தமிழ்நாடு

அரசு வழங்கும் ரூ.7000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மாற்றுத் திறனாளி குழந்தைகளை படிக்க ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குமார வேல் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி தகுதிக்கேற்ப உதவித் தொகை வழங்கப்படும் அது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த உதவித்தொகை பெற, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000ம், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 3000ம், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ.4000ம், இளநிலை பட்டப் படிப்புக்கு ரூ.6000 மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது. அதே போல பார்வை இழந்த மாணவ மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் டிப்ளமோ படிக்கும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கு ரூ.3000 மற்றும் இளநிலை படிப்புக்கு ரூ.5000, முதுநிலை படிப்புக்கு ரூ.6000 வழங்கப்படும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: