விளையாட்டு

என் பயோபிக் உருவாகிறதா? யார்க்கர் நடராஜனின் பதில்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகச் சென்று அபார திறமை மற்றும் கடின உழைப்பு மூலம் அந்தத் தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டதுடன், பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

சமீபத்தில் நாடு திரும்பிய நடராஜனுக்கு, அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னம்பம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நடராஜன் அளித்த பேட்டி ஒன்றில், “எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க சில இயக்குநர்கள் என்னை அணுகினர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!