ஆன்மீகம்

எப்போது யாரை வணங்குதல் சிறப்பு!

நீங்கள் எந்த செயலுக்காக வெளியே செல்வதாக இருந்தாலுமே நெற்றியில் ஒரு விபூதித் திலகம் இட்டு இறைவனை வணங்கி சிறிது நேரம் அமர்ந்து ஏதேனும் ஓரிரு சுவாமி அஷ்டோத்தரங்களை அல்லது ஸ்லோகங்களை சொல்லி விட்டுப் புறப்பட்டால் போகும் காரியங்கள் ஜெயம் ஆகும் என்பது நம்பிக்கை. அதிலும் நீங்கள் வழிபடுவது உங்களது குல தெய்வமாக இருந்தால் மேலும் பல நல்ல பலன்களை நீங்கள் இயற்கையாகவே பெறலாம்.

மற்றபடி, வெளியே கிளம்பும் போது எந்த தெய்வத்தை யார் வணங்குவது சிறப்பு.. வாருங்கள் பார்ப்போம்.

1. நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்வதானால் சந்திரன் சூடிய சிவ பெருமானை வழிபட்டுச் செல்லுதல் சிறப்பு.

2. ஜோதிடம் பார்க்க, திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக வெளியில் செல்லும் சமயத்தில் விநாயகரை வழி பட்டுச் செல்லுதல் சிறப்பு.

3. பணம் விஷயமாக வெளியில் புறப்பட்டால் மகா லக்ஷ்மியை வணங்கிச் செல்லுதல் சிறப்பு.

4. கல்வி சம்பந்தமாக வெளியில் செல்லும் சமயத்தில் சரஸ்வதி அல்லது ஹயக்ரீவரை வணங்கி விட்டுச் செல்லுதல் நலம்.

5. வெளி ஊர்களுக்கு செல்வதானால் ஏழுமலையானை வணங்கி விட்டுச் செல்லுதல் சிறப்பு.

6. வீடு, வாகனம் வாங்க… வாழ்க்கை வசதி மேம்பட… போன்ற இது சம்பந்தமான விஷயமாக வெளியில் சென்றால் மகாவிஷ்ணுவை வழிபட்டுச் செல்லுதல் சிறப்பு.

7. மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்லும் சமயத்தில் வைத்தீஸ்வரன் அல்லது தன்வந்திரி பகவானை வழிபட்டு செல்லுதல் நலம்.

8. வழக்கு, விவகாரம் சம்பந்தமாக வெளியில் சென்றால் காளி, பைரவர் அல்லது சக்கரத்தாழ்வாரை வணங்கி விட்டுச் செல்லுதல் நலம்.

இப்படியாக தெய்வங்களை தேர்ந்து எடுத்து வணங்கி விட்டு வெளி இடங்களுக்குச் சென்றால் காரிய சித்தி உண்டு என்பது ஐதீகம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  திருமணம் செய்தும் சிலருக்கு சந்நியாச வாழ்க்கை ஏன்?
Back to top button
error: